
இந்நிலையில், பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது என்ற செய்தி வெளியானது. எனவே, பாக்கிஸ்தான் பின்லேடனின் மறைவிடம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், கைது செய்து வைத்திருக்கும் அவரது மனைவிமார்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வலியுறுத்தியது. இதற்கு ஆரம்பத்தில் மறுத்த பாகிஸ்தான், அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலால் இப்போது சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், அவர்களிடம் பேட்டி மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை கேட்டு அவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளது. இவ்விசயத்தில் பாகிஸ்தானின் பிடிவாதம் தொடருமா அல்லது தளருமா என்பது விரைவில் தெரியவரலாம்
No comments:
Post a Comment