ஒசாமா பின் லாடனின் அன்பான, அழகிய மனைவி 29 வயதுடைய அமல் யமன் நாட்டைச் சார்ந்தவர்.
இஸ்லாம் நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்கின்றது . அவருடன் மூன்று மனைவியரும் உடன் இருந்தனர்.
அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆயுதமற்ற ஒருவரை நிராயுதபாணியான நிலையில் கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment