Wednesday, November 14, 2018

தினம் தினம் குழந்தைகள் தினம் ....


ஆனந்தம் பிறக்க
கவலைகள் மறக்க
ஆசையோடு தேடி
அரவணைத்து கொஞ்சும்
அன்பான செல்லங்கள்
இறைவன் வழங்கிய
அருட் செல்வங்கள் ....

சத்தம் குறையாது
நித்தம் கொடுத்தாலும்
பூவிதழில் பதிக்கிற
முத்தம் அலுக்காது ....


பற்கள் உதிர்க்கும்
முல்லை சிரிப்பு
எல்லை தாண்டிய
மகிழ்வின் விரிப்பு ....

குரலெனும் வீணையில்
ரீங்கார விரலசைத்து
மீட்டுகிற சங்கீதம்
காற்றினில் ஓசையெழுப்பும் ....

பாசக் கிளைகளில்
பூத்துக் குலுங்கி
மணம் பரப்புகிற
வாசப் பூக்கள் ....

தத்தி நடந்து
மழலை மொழியாடி
சுத்தி வந்து
கட்டிப் பிடித்து
மகிழ்ந்து விளையாடும் ....

கறைகள் படா
வெள்ளை மனசில்
குறைகள் அகன்று
நிறைகள் ததும்பும் ...

பணடம் வாங்க
அடம் பிடித்து
நம்மிதய அறைகளில்
இடம் பிடிக்கும் ....

அழகான அழுகையில்
நம்மனசை உழுகையில்
நமக்குள் எழுந்த
கோபமும் பறந்தோடும் ....

குழந்தைகளின் கூட்டம்
தெவிட்டா பேரின்பம் ....



அப்துல் கபூர்
14.11.2018 ...

No comments: