Friday, November 9, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammad

உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் .
இவர் சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர். சமூக சேவையில் நாட்டம் காரணமாக  பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயணிக்கின்றார் கவிதை மற்றும் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்..
சமரசம் பத்திரிகையிலும் இவரது எழுத்துகள் அவ்வப்போது வெளியாகியுள்ளது..
பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைபடைத்த  பெருமக்களை அறியப்படுத்தவில்லை என்றால் அது அடுத்த தலைமுறைக்கு தெரியாமலேயே போகும். சான்றோர்களை போற்றுவது மானிடர்க்கு சிறப்புத்தான்

ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammadஅவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்,இவர் ஒரு ஆசிரியரும், கவிஞருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் எமது நீடுர் சீசன்ஸ் வலைப்பதிவில் நிறைய உள்ளன

இவர் எழுதிய நூல்கள்
https://drive.google.com/file/d/1MIN9a8HNVjDs_tM-apCiLGD_zlOMgHvI/view?usp=sharing




வீரம் செறிந்த இஸ்லாம்
நிழலில்லாத சூரியன்
தூது வந்த வீரர்
இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களை  வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
அன்புடன் .
அ.முகம்மது அலி ஜின்னா






 ------------------------------------------------------------
அறிந்து கொள்ளுங்கள் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது பற்றி: 

சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், புதுக்கோட்டை கலைமான் அறக்கட்டளை, திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture முதலிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர். கவிஞர்,எழுத்தாளர்,நூலாசிரியர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர்,சொற்பொழிவளர் எனத் தனித்தன்மையோடு இயங்கிவருபவர்.
இவருடைய முதல் நூலான ”வீரம் செறிந்த இஸ்லாம்”, இஸ்லாம் மார்க்கத்தின் பார்வையில் ஒரு தத்துவத்தை வரலாற்றின் அடிப்படையில் இலக்கியத் தரத்தோடு தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு நூலாக வழங்கியமைக்காக சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் விருது பெற்றதாகும்(1987).

உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள- வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைலின் புகழ்பெற்ற “On Heroes and Hero-Worship and the Heroic in History” என்ற நூல் 1840-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவாகும்.இந்த நூலின் “The Hero as Prophet-Mahomet : Islam" என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தை “தூது வந்த வீரர்” என்ற தலைப்பில் மூல மொழியான ஆங்கிலப் பதிப்புகளில் கூட இடம் பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக முதன்முதலாக 1994-இல் வெளியிட்ட பதிப்பாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இளவரசர் சார்லஸ் 1993-இல் “Islam and the west” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவையும் “இஸ்லாமும் மேற்கு நாடுகளும்” என்ற தலைப்பில் நூலாக வெளிக் கொணர்ந்தார். இவ்விரண்டு நூல்களுடன் இவருடைய கவிதைகள்-பாடல்களின் தொகுப்பான “நிழலில்லாத சூரியன்” என்ற நூலையும் 1994-இல் வெளியிட்டார்.

இந்தியத் திருநாட்டின் பொன்விழா ஆண்டு நினைவாக ஆகஸ்ட்,1998-இல் ”இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்” என்ற ஆய்வு நூலை ஏம்பல் தஜம்முல் முகம்மது எழுதினார்.இந்த நூலை `திருவருட்பேரவை’எனும் சமய நல்லிணக்க அமைப்பின் தலைமையில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டதன் மூலம் இந்த நூல் பெரிதும் சிறப்பிக்கப்பட்டது.(இந்த நூற்பணிக்காக `சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்’ என்ற விருதினை இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன்னுடைய திருச்சி மாநாட்டில் வழங்கிச் சிறப்பித்தது.) இந்த நூல் சர்வ சமயச் சான்றோர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Religious Harmony – an Islamic Doctrine” என்ற தலைப்பில் ஒரு தனிச்சிறந்த பதிப்பாக வெளியானது. பின்னர் இந்த நூலுக்கு திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture என்ற நிறுவனம் விருது கொடுத்துச் சிறப்பித்தது.[` Religious Harmony-An Islamic Doctrine’ is included in UNESCO’s index translationum.(S.No. 41/48) and used in American editions as a reference book.]. ”திருக் குர்-ஆனில் பிற சமய மதிப்பீடுகள்-Quranic View of Other Religions”-என்ற ஆய்வேடு அகில இந்திய அளவிலான ஒரு மாநாட்டில்(The All India Seminar on Interpreting the Scriptures, Hermeneutics of Sacred writings organized by The School of Religions, Philosophy & Humanist Thought, Madurai Kamaraj University, under the auspices of DRS – SAP – UCG.) சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.ஏம்பல் தஜம்முல் முகம்மது சமய நல்லிணக்கம் என்ற கொள்கையை விளக்கும் விதத்தில் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவை தவிர நான்கு பாட நூல்கள், வரலாற்று நூல்கள் உட்பட மொத்தம் பதினாறு நூல்களும் `நடுநிலையான மொழிக் கொள்கை’,`தமிழுள்ள தமிழ்’ முதலான பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தகவல் : Mohamed Ali
Source:பதிவுத்தடாகம்

No comments: