Wednesday, November 28, 2018

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

சிலையிலும் படங்களிலும்
அல்லாமல்,
சிந்தனையிலும் செயல்களிலும்
உணர்வுகளிலும் ஒழுங்குகளிலும்
நினைவு கூறப்படும்
சாதனைத் தலைவர்.

மொழிகளை வென்றவர்
நிறங்களை வென்றவர்
இனங்களை வென்றவர்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
நிரந்தர தலைவர்.

உயிர்களும் உடமைகளும்
உதிரமும் உறவுகளும்
தாயும் தந்தையும்
சகலமும் அர்ப்பணமாக்கப்படும்
சாந்தத்தின் சொந்தக்காரர்...


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யாரசூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யா ஹபீபல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யாரஹ்மத்துல்லில் ஆலமீன்.!

#இனிய மீலாதுந்நபி தின வாழ்த்துகள்

#மீலாத் ஊர்வலத்தில் மகன் ஹாமீம் ஜல்வத்தி

நிஷா மன்சூர்

No comments: