Thursday, November 29, 2018

எனது அன்பு இந்திய வாலிபர்களே இளைஞர்களே உங்களுக்கு தான் இந்த செய்தி :--


1970 முதல் தமிழ்நாட்டின் மக்கள் அரபு நாடுகளாகிய துபாய் அபுதாபி சார்ஜா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா பஹ்ரைன் ஓமன் கத்தார் குவைத்து போன்ற நாடுகளுக்கு ஆரம்ப காலம் முதல் கடந்த சில ஆண்டுகள் வரை பிழைப்பு தேடி போனவர்கள் அதில் நன்றாக சம்பாதித்து வெற்றி கண்டவர்கள் பலர் , வீணா போனவர்களும் சிலர் உண்டு

தற்போது சவூதிஅரேபியா வின் மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருகின்றது இது யாவரும் அறிந்ததே

அரபு நாடுகளுக்கு மாற்றாக வேறு பல இஸ்லாமிய நாடுகள் அதிக பெட்ரோல் வளம் மிக்க நாடுகளும் உள்ளது பலர் இதனை அறியாமல் இருக்கலாம்

தற்போது அதில் சில நாடுகளை அறிந்து கொள்ளுங்கள் :--


அஜர்பெயிஜான் - 97% முஸ்லீமகள்

கஜகஸ்தான் - 70% முஸ்லீம்கள்

உஜ்பெகிஸ்தான் - 96% முஸ்லீமகள்

துருக்மேனிஸ்தான் - 89% முஸ்லீம்கள்

இந்த நாடுகள் அதிக எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள செழிப்பான நாடுகள் இந்த நாடுகள் பல காலமாக ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தது தற்போது சுதந்திர நாடாக (மக்கள் குடியரசாக ) இருக்கிறது

நிறைய வேலை வாய்ப்புகளும் சுதந்திரமான நாடுகள் (அரபு நாடுகள் போன்று அடக்கு முறை இங்கே கிடையாது )

குறைவான மக்கள் தொகையும் அதிக வளமும் உள்ள , நாகரீகமான மென்மையான மனிதர்கள் வாழும் நாடுகள்

இனிமேல் வரும் , வளரும் முஸ்லீம் சமுதாயமக்களும் , மற்ற இந்திய ஏழை சமுதாய மக்களும் நமது இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்களும் இது போன்ற வளமான நாடுகளுக்கு சென்று வேலை வாய்பினை பெற முயற்ச்சி செய்யலாம் .

முன்பு நமது முஸ்லீம் சமுதாய மக்கள் போதிய கல்வி அறிவு பெறாமலும் , கல்வி அறிவு பெற்றிருந்தாலும் போதிய திறமையை வளர்த்து கொள்ளாமல் அரபு நாடுகளுக்கு கக்கூஸ் கழுவ , ரோடு போட , ஒட்டகம் ஆடு மேய்க்க , பலதியாவில் ரோட்டில் குப்பை கூட்ட போனது போல் போகாமல்

போதிய கல்வியும் திறமையும் வளர்த்து கொண்டு இது போன்ற புதிய நாடுகளுக்கு சென்றால் நல்ல வேலை வாய்ப்புகளை பெறலாம்

இந்த நாடுகளில் மக்கள் நாகரீகமானவர்கள் மென்மையானவர்கள் அழகானவர்கள் , மனிதர்களை மதிக்க கூடியவர்கள் சூது வாது அறியாதவர்கள்

இந்த நாடுகளுக்கு செல்லும் திருமணம் ஆகாத இளம் வயதினர்கள் அந்த நாடுகளிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விடலாம்

இந்திய பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு ஆன் லைனில் வருடா வருடம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது

மேலும் விபரம் தேவை உள்ளவர்கள் அந்த அந்த நாடுகளின் அரசாங்க வைப் சைட்டில் விரிவான தகவலை பெறலாம் .

குறிப்பு :- நான் எந்த நாட்டிற்கும் ஏஜெண்ட் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்

உங்களுக்கு தேவையான எல்லா நாட்டு இமிகிரேஷன் தகவல்களும் அந்த அந்த நாட்டின் அரசாங்க வைப் சைட்டில் உள்ளது.

உங்கள் நண்பன்...
சுலைமான்..


தகவல் Nazeer Suvanappiriyan

No comments: