Wednesday, November 7, 2018

உன்னை அறிந்தால்

by.Dr.habibullah

கொஞ்சம் வெயிட்
பண்ணுங்க சார்...பிளீஸ்

என்ன...என்னையா வெயிட்
பண்ண சொல்றே!
நான் யார் தெரியுமா!!

சாதாரணமாக எல்லா ரிசப்ஸன்
கவுண்டர்களிலும் பொறுமை
இழந்த சில விஐபி க்களால்
அவ்வப்போது எழுப்பப் படும்
அதிகாரக் குரல்கள்...

இந்த விதிகளை மீறிய
ஒரு விசித்திர விஐபி.


இன்று காலை
மருத்துவ மனையில் ஒரு
நடுத்தர வயது பெண்மணி
நீண்ட நேரம்... மிகவும்
பொறுமையாக காத்திருந்து
தனது இரண்டு மகன்களையும்
ஒருவர் பின் ஒருவராக
என்னிடம் காட்டி
டிரீட்மெண்ட் சம்பந்தமான
ஆலோசனைகளை கேட்டு
தெளிவு பெற்றுக் கொண்டு இருந்தார்.

சாதாரணமாக எனது
சேம்பரில் வரும் எல்லோரையும்
முன்னால் இருக்கும் நாற்காலி
களில் அமர வைத்து பேசுவது
எனது வழக்கம்.ஆனால் இந்த
பெண்மணியை அவ்வாறு
நான் அமரச் சொல்லவில்லை.
அவரும் நாற்காலியில்
அமரவில்லை.

மிக மிக சாதாரண எளிய
உடையில், சாமானிய குடும்ப
தலைவியாக காட்சி தந்த
அந்த பெண்மணியிடம்
குழந்தைகளுக்கான சிகிச்சை
முறைகளை அவரது வீட்டில்
வைத்து தொடர்வதற்கான
வழிமுறைகளை அவரிடம்
நான் விவரித்து விட்டு....
கேன் யூ டூ இட்..

சரி...நீங்க என்ன வேலை
செய்றீங்க! கேசுவலாகத் தான்
நான் அவரைக் கேட்டேன்

நான் ஒரு அசோஸியேட்
புரபஸர்...டாக்டர் சார்

வாட்...புரபஸரா...!
என்னால் நம்ப முடியவில்லை.
சரி...எந்த கல்லூரியில்!

மருத்துவக் கல்லூரியில்
தான் சார்...!
ஐ ஆம் அசோஸியேட் புரபஸர்
ஆஃப் பார்மகாலஜி.
நான், டிஜிஓ படிப்பை மதுரை
மருத்துவ கல்லூரியில் முடித்து
விட்டு, எம்டி பார்மகாலஜியை
திருநெல்வேலி மருத்துவ
கல்லூரியில் முடித்தேன்...

பக்கத்தில் நின்று இந்த
உரையாடலை கவனித்துக்
கொண்டு இருந்த எனது
நர்சால் வியப்பை அடக்க
இயலவில்லை.

என்னம்மா நீங்க! இதை
சொல்லி இருந்தால் நான்
முதல்லேயே உங்களை
உள்ளே அனுப்பி இருப்பேனே...மேடம்

தேட்ஸ் நாட் எ பிராப்ளம்,
ரூல்ஸ் ஆர் ரூல்ஸ் ஃபார்
எவரி ஒன்...புன்னகைத்தார்.

என்ன மேடம் நீங்க...
ஹேஸ் எ வுமண்,வெறும்
டிஜிஒ வை மட்டும் வைத்தே
நீங்க புரபஸனலா பெரிய
அளவில் ஷைன் பண்ண
முடியுமே. ஏன் தேவை
இல்லாமல் எம்டி பார்மகாலஜி
படிச்சீங்க...! நான் கேட்டேன்.

நோ டாக்டர்
ஐ லவ் டீச்சிங்....அதான்
மெடர்னிடியை கை விட்டேன்.
நவ்,நோ டென்சன் இன் டூயிங்
டீச்சிங்...ஐ ஆம் ஹேப்பி சார்..
டீச்சிங் தொழில் தான் எனக்கு
பிடித்த ஒன்று...ஸோ ஐ லவ் இட்.

பிரபல மருத்துவ பேராசிரியர்
ஒருவரின், தன்னை யார் என்று
அறிமுகம் செய்யாத அந்த
எளிமை கலந்த பண்பு,
அதில் இருந்த துணிவு...

தன்னை மட்டும் ஒருவன்
அறிந்தால்..
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல்
வாழ முடியும் என்ற உண்மையை
உறுதி பட உணர்த்தியதாகவே
என் மனதில் பட்டது.
நான் மவுனமாக எழுந்து
நின்று அவரை வழி அனுப்பி
வைத்தேன்.

டாக்டர் என்று அறிமுகம்
செய்து கொள்ள இப்போது
எனக்கு கூட சற்று...
தயக்கமாகவே இருக்கிறது.


Vavar F Habibullah

No comments: