Saturday, November 17, 2018

#மாநிலமெங்கும் #மாநபி_வாசம் ... ! அபு ஹாஷிமா


Abu Haashima
December 17, 2012
#மாநிலமெங்கும்
#மாநபி_வாசம் ... !
அபு ஹாஷிமா

தமிழ் நாட்டின் ஒரே ஒரு 
#சதாவதானி
குமரி மண் பெற்றெடுத்த பாவலரேறு #சதாவதானி_செய்குத்_தம்பிப்_பாவலர் அவர்கள் எழுதிய 
#நபிகள்_நாயக_மான்மிய_மஞ்சரி யிலிருந்து ஒரு பாடலை குமரி மாவட்ட இஸ்லாமிய இசையருவி 
#குமரி_அபூபக்கர் அவர்கள் 
நமக்காக பாடுகிறார்.

அபுபக்கர் அண்ணனின் சொந்த ஊர் 
குமரி மாவட்டத்திலுள்ள 
#காஞ்சாம்புரம்.

அபுபக்கர் அண்ணன் பலகாலம் 
#கவி_கா_மு_ஷெரீப் அவர்களோடு 
பயணித்தவர்.
#சீறாப்புராண விரிவுரையை தமிழகமெங்கும் நடத்தியவர் ஷெரீப் அவர்கள்.
அபுபக்கர் அண்ணன் சீறாப்புராண பாடல்களை ராகத்தோடு பாட
அதற்கு விளக்கவுரை கொடுப்பார் 
ஷெரீப் அண்ணன்.

ஒரு நாள் இருநாள் நிகழ்ச்சிக்காக 
பல ஊர்களுக்கும் இவர்கள் செல்லும்போது நிகழ்ச்சியின் 
அருமையிலும் அழகிலும் ஈர்க்கப்பட்ட மக்கள் பத்து நாள் ஒருமாதம் வரை 
நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதுண்டு.
மலேசியா சிங்கப்பூரிலும் இவர்களின் 
நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

கோட்டாறில் நடைபெறும் 
#ஆலிப்புலவர் அப்பா எழுதிய
#மிஃராஜ்_மாலை பாடப்படும் 
நிகழ்ச்சியிலும் அபுபக்கர் அண்ணனை 
கலந்து கொள்ள வைத்து 12 நாட்கள் 
மிஃராஜ் மாலை பாட வைத்திருக்கிறேன்.

நண்பர் 
#கோம்பை_அன்வர்  இயக்கிய 
#யாதும்  என்ற ஆவணப்படத்தில் 
ஆலிப்புலவர் கோட்டாறு 
மிஃராஜ் மாலையை
அரங்கேற்றம் செய்த செய்தி இடம்பெறும்.
அந்த காட்சியிலும் அபுபக்கர் அண்ணன் 
மிஃராஜ் மாலையிலிருந்து சில வரிகளை 
அருமையாகப் பாடுவார்.
அதற்கான விளக்க உரையை வழங்கியவர் அண்ணன்
#கவிக்கோ அவர்கள்.

#நபிகளார்  பிறந்த மாதமான 
புனிதமிக்க இந்த ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் இந்த பாடலை உங்களோடு
பகிர்ந்து கொள்வதில் 
சந்தோஷம் கொள்கிறேன்.

No comments: