Tuesday, May 8, 2018

ஏர்போர்ட் சாலையென்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்

Abu Haashima

இது திருவனந்தபுரம் ஏர்போர்ட்
சாலையென்று நினைத்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்.

இது நாகர்கோயில் பக்கமுள்ள
வடிவீஸ்வரம் கிராமம்.
நகரத்தின் முக்கிய சாலைகளிலோ
அல்லது நகரத்தின்
வேறு எந்த பகுதிகளிலோ
அமைக்கப்படாத
ஒளியுமிழும் கற்கள்
சாலையின் இருபுறமும் அமைப்கப்பட்டு
அழகான ரன்வேயைப்போல காட்சியளிக்கின்றன வடிவீஸ்வரம் கிராமத்தின் சாலைகளும் தெருக்களும்.
நகரத்தின் மற்ற தெருக்கள் ...
குறிப்பாக
முஸ்லிம்கள் வாழும் தெருக்களும்
குடியிருப்புப் பகுதிகளும்
வாகனங்கள் ஓட்டிச் செல்வதற்கே
தகுதியற்ற சாலைகளாகி பல வருடங்களாகி விட்டன.
ஆளும் கட்சியும் சரி
திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் சரி
முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்
குண்டுகுழிகளாக இருப்பதையோ
குப்பை மேடுகளாக மாறுவதையோ
கண்டு கொள்வதே இல்லை.

எல்லா கட்சி பிரமுகர்களுக்கும்
பாய்கள் கொடுக்கும் பிரியானிதான் முக்கியம்.
அவர்களின் குடியிருப்புப் பகுதி சுகாதாரம்
முக்கிமில்லை.

சரி ...
வடிவீஸ்வரம் கிராமத்துத் தெருக்கள்
ஏர்போர்ட் ரன்வேபோல் ஒளி உமிழ
என்ன காரணம் ?


வேறொன்றுமில்லை ஜென்டில்மென் ...
அங்கேதான்
இந்தியாவின் உயர்சாதி பிராமணர்களும்
நாகர்கோயிலுக்கு பிழைக்க வந்து
கோடீஸ்வரர் களாக மாறி இருக்கின்ற
மார்வாடி சேட்டுகளும் வசிக்கிறார்கள்.

அவர்களுக்காக
ஆட்சியில் இருக்கின்ற
பாஜக முக்கியஸ்தர்களும்
ஆளும் அடிமை அரசும்
விரித்துப் போட்டிருக்கின்ற
வரவேற்பு கம்பளம்தான் இந்த ரன்வே ரோடு.

Abu Haashima

No comments: