Thursday, May 10, 2018

ட்விங்கிள் ட்விீங்கிள் லிட்டில் ஸ்டார்.

இன்று வாசித்த மாநாட்டுக் கவிதை.
========+=======+======+======
ட்விங்கிள் ட்விீங்கிள் லிட்டில் ஸ்டார்.
========+========+======+======
தனம்-
ஒடுக்கப்பட்ட இனம் என்ற
ஒற்றைப் பிழைதான்
வேறு
தவறெதுவும் செய்யவில்லை
இந்தத் தளிர்.

கப்பு தண்ணீருக்காக
"கட்டிநாயக்கன்பட்டி"
அந்த
செப்புத் தேரை
சிதைத்துப் போட்டது.



சுதந்திர தினத்தில்
கொடியேற்றிவைத்து
கங்கை காவிரியை
இணைக்கும்
கம்பீர உரைகள்
பட்டணத்து டி வி களில்.

பொன்விழா நெருங்கும்
சுதந்திர தேசத்தில்
தலித்தின்
தாகம் தணிக்கும்
ஒரு குவளை தண்ணீரின் விலை
ஒரு "குவளை கண்".

இழப்பதற்கு
வேறு ஏதுமற்ற
ஒரு
சின்ன நட்சத்திரம்
"ராவின்"ஆட்சியிலே
தன் வெளிச்சத்தை
இழந்தது.

(தக்கலை ஹலீமா)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails