Sunday, May 20, 2018

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்...! (4)


---- மர்யம் சித்திகா

மகரந்தச் சிதறல்கள் ...!

*** தான் ***

சுதந்திரம்..!
எனக்கு,
என்மீதான
உரிமை..!

***தொடர் ***

புயலால்
பல ஆயிரம்
மரங்கள்
சாய்ந்தன..!
எத்தனை
நட்சத்திரங்களின்
கண்கள்
அவிழ்ந்தனவோ...!

***எதிர்***

வாழ்க்கை
ஒரு நாளும்
நம்மை
பயமுறுத்துவதில்லை..!
ஆனால்,
நாம்
மிகவும்
பயங்கரமானவர்களாக
மாறிக்கொண்டு இருக்கிறோம்..!

***குமட்டல் ***

எனது,
அவநம்பிக்கையின்
துர்நாற்றம்,
எனது,
முகத்தையே
சுழிக்கவைக்கிறது...!

***குமிழிகள்***

வளர்ச்சி,
நாகரீகம்,
பண்பாடு,
கலாச்சாரம்,
நவீனத்துவம்...
வழுக்குப் பாறையில்
உதிர்ந்த
பூக்கள்...!

Hilal Musthafa
 ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள் ..! (3)

No comments: