Wednesday, December 31, 2014

காலப்பரிசு/ வெளி / தாஜ்

காலப்பரிசு/ வெளி / தாஜ்
-----------------------
மண்டைக் குத்தலில்
மூச்சுவிட பரிதவித்த நாளில்
கோப்புகளின்
சிதைவை அறிந்தேன்
ஆக்கங்கள் பல
குலைந்து போக
செல்லரித்து
படிமங்களின் அடுக்கும்
காற்றின் திசைக்கு நழுவி விட
வசீகரப் பக்கங்களும்
வானத்தைத் துருவிய
கேள்விகளும் தொலைந்து...
பத்திரப் படுத்திய
கவிதை நாட்களையும் காணோம்.
***************************

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 10

இருபுறமும் புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் வாகனத்தை அதுவும் இருள் சூழ்ந்த இரவில் செலுத்துவது சிரமமாகவே இருந்தது.
நல்லவேளை எதிரில் வாகனங்கள் போக்குவரத்து எதுவுமில்லை.

இரவு 11 மணியளவில் பாதை ஒரு ஊர் போல தோற்றமளித்த இடத்தை அடைந்தது.
ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. மிக குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தி ஆட்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தோம்.
இதுபோன்ற அனுபவங்கள் சர்வாதிகார ஆட்சி நடந்த ஜைரே நாட்டில் இப்போது காங்கோ என்று அழைக்கப் படுகின்ற நாட்டில் பெற்றதுண்டு ஆனாலும் தெற்கு சூடான் அனுபவம் புதுமையானது.

சிறிது நேரத்தில் கண்ணில் பட்ட ஒருவரிடம் நாங்கள் போகவேண்டிய நார்வேஜியன் நாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சென்றடைந்தோம்.

"நிஷா வந்திருக்காரே..." / 'நேசம்' கவிதையுடன்

கவிஞர் தேவமகள் நினைவு இலக்கிய விருது 2000 வருட இளம் கவிஞருக்காக எனக்கு வழங்கப்பட்டது...
அதற்குப் பிறகு நான் கவிதை இலக்கியப் பங்களிப்பிலிருந்து முழுமையாக விலகி முழுக்க முழுக்க தொழிலில்
முனைப்பு காட்டினேன்....

அந்தக் கவிதை
********************
நேசம் -நிஷா

காரோடும் சாலைநடுவே
விபரீதமறியாமல்
அமர்ந்திருந்த பறவை
சக்கரம் நசுக்கத்துடிக்கும்
கடைசி நொடிவரை
பறப்பதைப் பார்க்கவில்லை..

சற்றே திரும்பி சாலையைப் பார்த்தால்
உடைந்த சிறகுகளும்
ரத்தத்தடயமும் இருக்குமோவெனும்
பயத்தில்
மனதில் உருவாக்கிக் கொண்டேன்.......
பறவை பறக்கும் காட்சியை...!!
 

Monday, December 29, 2014

புத்தாண்டு 2015 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை


போனது போகட்டும்,நிகழ்வது நல்லதாக அமையட்டும் வருவதை சிறப்பாகட்டும். நம்பிக்கையே வாழ்வு. இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை. நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் . நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய் அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடு. கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை. ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]

இன்றையே தினமே நம்மிடம்  இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்  தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும்.  தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும் 
 இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும்  மனநிறைவுடன் இருப்போம்.

ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
பறவைகள் போல்,  நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம்  இவைகளை தூக்கிச்  செல்வதை தவிர்ப்போம்

வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும்  ...

Sunday, December 28, 2014

''இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''

கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ......!
நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி


தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.

கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..

Saturday, December 27, 2014

பூட்டிவைத்த உணர்வுகள்

உள்
ஓர் அலுப்பு சுகமறியாத
உணர்வுகளின் பிரசவ அறை

உணர்வுகளோ
பிறந்த கணமே தாயைத் தகிக்கும்
நெருப்புக் குஞ்சுகள்

வெப்பம் தாளாமல்
வெளியேற்றும் வழிகேட்டு
மனம் அறிவுக்கு அனுப்பும்
ஓர் அவசர விண்ணப்பம்

கூடாதென்று கூக்குரலிட்டு
வழிகளை அடைத்து வாசலை மூடி
வைராக்கியனைக் காவலிடும்
அறிவு

முட்டி மோதி நினைவுகளை
நிமிசம் தவறாமல் அழைத்து
சிந்தனையை நச்சரித்து
மறுப்பு வார்த்தைகளை மிதித்து
சபல சந்தர்ப்ப மரங்கொத்திகள்
கொத்திக் கிழித்த பலமற்றத் தளங்களைப்
பயன்படுத்தத் துடிக்கும் உணர்வுகள்

இறக்குமதி சமையல் எண்ணைகளுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இயலும்

டாலர் நமது நாட்டைவிட்டு வெளியில் செல்வதற்கு பெரும்காரணமாக இருப்பது பெட்ரோல், டீசல் கச்சா எண்ணைய் இறக்குமதி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாமாயில், ரீஃபைன்ட் ஆயில் உள்ளிட்ட சமையல் எண்ணைகளை இறக்குமதி செய்வதாலும் நமது அந்நியச் செலாவணி பெருமளவில் வெளியில் செல்லுகிறது. பெட்ரோல்,டீசலுக்கு இங்கு வழியில்லை. ஆனால் பெரும் நிலப்பரப்பையும், விவசாயத்தைச் சார்ந்து இருக்கும் பெரும்பாலான மக்களையும் கொண்ட ஒரு தேசம் சமையல் எண்ணையை இறக்குமதி செய்வது என்பது பெரும்கொடுமை. இறக்குமதி சமையல் எண்ணைகளால் இங்குள்ள விவசாயிகள் எண்ணைய் வித்துகளுக்கு உரிய விலைகிட்டாது அதைப் பயிரிடுவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகும் சூழல். இதை மனதில் வைத்து நிதி மற்றும் வணிகத்துறை அமைச்சர் சகோதரி நிர்மலா சீதாராமனுக்கு அவர் பதவியேற்ற சமயத்தில் கீழ்கண்ட மெயிலை அனுப்பினேன்.----------

ஜி.எஸ்.டி வரி # வரி வரியாய் பொறுமையாய் படிக்கவும்

நாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி? பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.

எதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி ( maximum retail price ) என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம்.

Friday, December 26, 2014

நதிமூலம் -நிஷா


பெயர்களின் நீட்சியில் நெளியும் நீள்பாம்புகளை
நாவிலிருந்து பிரித்தெடுக்கிறேன்

கவலைகளென்றேதுமில்லை,
சகலத்திற்கும் நானே ஆதாரமாயிருப்பதால்
சகலத்திற்கும் நானே தீர்வுமாயிருக்கிறேன்

மறுப்புகளும் பிணக்குகளுமற்ற பாட்டை,
என் பிரத்யேக சிறகுகளுக்கு.

தோழி கேட்கிறாள்,
ஆழ்கடலின் பேரமைதியின் போதையில் களிப்புறும்
ரட்சிபிஸ் மீன்களின் ஓங்கார முழக்கம் அறிவாயா...???

இருள் அலையும் அடர்காட்டில் மிதக்கும் ஒளிப்புள்ளிகள்,
என் சுயம் விரிந்துகிளறும் பூக்களின் வாசமென.

பனித்துகள் அலைவுகளின் சிற்றதிர்வு,
தப்பிதமான மீட்ட்டல்களில் தவித்தலையும் பேரிசை.

Wednesday, December 24, 2014

நான்..... -கிருஷ்ணன்பாலா

உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

நேர்மையும் புத்திக் கூர்மையும் கொண்டு
நிதமும் வாழும் தவநெறி கொண்டவன்;
வேர்வையும் விளைச்சலும் விரோதமான
வினோதம் கண்டதை ஆய்வு செய்பவன்!

குற்ற உறவுகள் முற்றும் பிரிந்தபின்;
கூடா உறவெனக் கண்டு தெளிந்தவன்:
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள்
ஆனபின் அவற்றால் ஞானம் உற்றவன்!

Thursday, December 18, 2014

தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம் கதறி அழுதுவிட்டாராம்






தீவிரவாதிகள் பள்ளிச்சிறுவர்களைக் கொன்று குவித்தது பற்றி ‘நேரலை’ செய்தி வாசித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ARY தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம்,
எந்த ஆட்சியாளராலும் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி கதறி அழுதுவிட்டாராம்.



Rafeeq Friend

மறந்து விட்டீர்களே ..!

வாணவேடிக்கை பார்த்த எங்களுக்கு
வாழ்க்கையே வேடிக்கை ஆகி விடும்
என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே ....!

மத்தாப்பு வெடியில் கூட பாசானம் இருப்பதை சொல்ல மறந்து விட்டீர்களே !

பொம்மை துப்பாக்கியில் கூட குண்டுகள் இருப்பதை
சொல்ல மறந்து விட்டீர்களே !

கோலி குண்டு விளையாடும்
எங்களுக்கு நிஜக்குண்டுகளை காட்ட
மறந்து விட்டீர்களே ..!

Wednesday, December 17, 2014

கவிதை எழுத... பரப்பரப்பவரா நீங்கள்?- தாஜ் தீன்

கவிதை எழுத...
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!

'வைரமுத்துவை வாசித்திருக்கிறேனே!'
'கவிக்கோவை வாசித்திருக்கிறேனே!!'
என்பதெல்லாம் போதாது.
போதவே போதாது.

குளத்தில் முழுகியெழுவதற்கும்
கடலில் முழுகி எழுவதற்கும்
நிறம்ப வித்தியாசம் உண்டு.

இன்றைய
தமிழ்க் கவிதையின்
நீள, அகலம் + ஆழமும்
ஏகத்துக்கும் அபரிமிதமானது.
உலக கவிதைகளோடு
போட்டிப் போடக் கூடியது.

தீர்க்கமான கவிஞர்களின்
கவிதைத் தொகுப்புகள் எனும்
கடலில் முழுகி
முத்தெடுங்கள்!

பின்னர்...
கவிதை தானே கைகூடி
உங்களை பின் தொடரும்!
நீங்கள் எழுதும் வரிகளெல்லாமும் கூட
கவிதையாய் பரிணமிக்கும்!
 

முதல் சம்பளம்..!! -நிஷா மன்சூர்

அது ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ்,
+1 படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பனின் அண்ணன்தான் சேர்த்துவிட்டார்.
காலை 8.30 முதல் 3.00 மணி வரைதான் பள்ளி நேரம் என்பதால் அதற்குப் பிறகு வேலைக்குச் செல்லலாமென்று இணைந்தேன்.
சேரும்போது சம்பளம் குறித்து எதுவும் பேசவில்லை.

ஆரம்பத்தில் ஸ்க்ரீனைக் கழுவுவதுதான் பணியாக இருந்தது.
பின் பிரிண்டிங் செய்யும்போது உதவுவதும், ப்ரிண்டிங் முடிந்த பேப்பரிலிருந்து ஸ்டிக்கர்களை தனித்தனியாக ப்ளேடால் பிரிப்பதுமாகத் தொடர்ந்தது.

கம்ப்யூட்டர் அதிகம் புழங்கப்படாத 1989/1990 காலகட்டம் அது. கைகளால் ஓவியம் வரைந்துதான் டிசைன்கள் உருவாயின.
அதை கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,மேலும் கலர்கலரான ஆங்கில தமிழ் மாத இதழ்களும் அங்கு வருமென்பதால் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்ப் படிப்பதை/பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.

Friday, December 12, 2014

துயர் துடைக்கும் விரல்கள் கொடு !

 
இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...

அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !

மீத்தேன் பற்றிய ஒரு விழிப்புணர்வு

பூமிக்கு அடியில்... ஆழக்குடைந்து கொண்டு போய்... அடிப்பாறையை வெடிவைத்து உடைத்து அதில் உள்ள ‪#‎மீத்தேன்‬ போன்ற இன்ன பிற இயற்கை எரிவாயுவை எல்லாம், அடியில் மட்டும் துளைகள் இடப்பட்ட பைப் லைன் மூலம் பூமிக்கு வெளியே கடும் அழுத்தத்துடன் வெளிக்கொண்டு வரும் முறைக்கு பெயர்... ‪#‎FRACKING‬. ‬.

மெத்தப்படித்த உலக நாடுகள் அனைத்துமே இதனை எதிர்க்க காரணம் என்ன..?

பாறையை வெடிக்க வைக்கும் போது, பாதி எரிவாயு கீழ்நோக்கி வந்து துளையிட்ட பைப் மூலம் வெளியேறினாலும், மீதி எரிவாயு... வெடித்த பாறையின் இடுக்குகளின் வழியே மேல்நோக்கி கசிந்து வந்து நிலத்தடி நன்னீருடனும் அதற்கு மேல் மண்ணுடனும் கலந்து... அந்த மண்ணையே விவசாயத்துக்கு உதவாத நஞ்சாக்கி விடுவதோடு... நிலத்தடி நீரும் குடிக்க முடியாத படி, மாசுபட்டு எரிவாயு கலந்த நீர் என்பதால்... வாயு பிரியும் போது... தானே தீப்பிடித்து அப்பப்ப பற்றி எரியும் 'எரிநீர்' ஆகிவிடுகிறது..!

இணைப்பில் உள்ள எல்லா படங்களையும் பொறுமையாக பாருங்கள். இன்னும் அதிக படங்கள்... கூகுல் இமேஜ் ஜில் "methane fracking" அல்லது "anti-fracking" என்று தேடினால்... நிறைய கிடைக்கும்.
#‎StopMethaneExplorationInKauveriDelta‬




— feeling மீத்தேன் ஃப்ராக்கிங் எதிர்ப்புணர்வு குறைவாக உள்ளது நம்மிடம்...

தகவல் தந்தவர்  Mohamed Ashik
*********************************************************

Wednesday, December 10, 2014

வாசிப்பின் அவசியம் - பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும்.


வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை.
வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.

புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்?
 பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.

வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது.
பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.

Tuesday, December 9, 2014

எக்கச்சக்கமா பாஸ்ஃபேட் தாதுப்பொருள் மலை மலையாக மண்ணுக்கடியில் ..

பாஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்......
பாஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்......

வடக்கு சவூதி அரேபியாவில், ஜோர்டான் பார்டரில் எக்கச்சக்கமா பாஸ்ஃபேட் தாதுப்பொருள் மலை மலையாக மண்ணுக்கடியில் குவிஞ்சு கிடக்கிறது. அதை ‪ ‪#‎ஜாலமித்‬ ‬ என்ற இடத்தில் வெட்டி எடுத்து, சவூதி அரேபிய அரசின் கூட்ஸ் ட்ரெயினில் ஏற்றி... (இதுக்குன்னே இதுக்கு மட்டும் சவூதி அரசு சுமார் 2750 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளம் போட்டு தந்திருக்கு) இங்கே... நான் பணியாற்றும் ‪#‎மாஅதன்_பாஸ்ஃபேட்_கம்பெனி‬ யின் பளான்ட் சைட் டான... ‪#‎ராஸ்_அல்_க்ஹைர்‬ க்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து சேர்கிறது.

இந்த 'ராக் பாஸ்பேட் ஓர்' ஐ, ஏற்கனவே நாங்க தயாரிச்சு வச்சிருக்கும் சல்ஃபியூரிக் ஆஸிட்டை கலந்து, இதிலிருந்து பாஸ்ஃபாரிக் ஆசிட் தயாரிச்சு, இதையும், ஏற்கனவே நாங்க தயாரிச்சு வச்சிருக்கும் அம்மோனியாவையும் சேர்ந்து அதிலிருந்து '‪#‎டை_அம்மோனியம்_பாஸ்ஃபேட்‬'உரம் தயாரித்து பக்கத்தில் உள்ள சவூதி அரசின் துறைமுகம் மூலம் விவசாயம் நடக்கும் நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி ஆகிறது..! (எனது கம்பெனியின் ப்ராசஸ் பற்றிய வெரி வெரி சிம்பிள் ஸ்டோரி இது)


படத்தில் இருப்பது தான் அந்த பாஸ்ஃபேட் ஓர் வரும் டபுள் இஞ்சின் வச்ச மைல் நீள ரயில்..! நான் இருக்கும் கேம்ப்பை கடந்து தான் கம்பெனி அன்லோடிங் பாயிண்டுக்கு செல்ல வேண்டும். இங்கே, ஆள் இல்லாத ரெயில்வே கிராஸ் என்பதால்... பகலில் ரோட்டில் ஆளே இல்லாவிட்டாலும் சரி... மிட்நைட் என்றாலும் சரி... அநியாயத்துக்கு பெரிசா ஹாரன் சங்கு ஊதிக்கொண்டே ஊறுகிறார்கள்... சேஃப்டியாம்... அதுக்காக தூங்குவோரை எல்லாம் இப்படியா எழுப்பி விடுவது..?!?!?!

இதைத்தாங்க மேலே இரண்டு வரியில் சொல்லி இருக்கேன்....

Mohamed Ashik

இணையம் என்றொரு வேடந்தாங்களில்


இணையம் என்றொரு வேடந்தாங்கலில்
எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்

ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது
உயிரில் கரைந்தே உறவைத் தேடுது

இணைய நட்பெனும் புனிதம் பூக்குது
இதய மொத்தமும் இனிப்பில் மூழ்குது

விழிகள் கொத்தாத உருவக் கனிகளை
விருப்பம் போலவே மனங்கள் செதுக்குது

கண்கள் காணாத நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த கலப்பில் மலர்வதும்

உலகச் செய்திகள் அலசிப் பார்ப்பதும்
உள்ளூர்க் கதைகள் கிள்ளிச் சுவைப்பதும்

கவிதை கட்டுரை கொட்டிக் கொடுப்பதும்
கலைகள் பேசியே கரைந்து போவதும்

சின்னச் சின்னதாய்த் துணுக்கு மெல்வதும்
சிரிப்புச் சில்லறை அள்ளி இறைப்பதும்

தனிமைக் கொடுமையில் இனிமை நிறைப்பதும்
கருணை அன்புடன் கதைகள் கேட்பதும்

அழுகைத் துயரினில் அள்ளி அணைப்பதும்
எண்ண விரல்களால் கன்னம் துடைப்பதும்

Monday, December 8, 2014

சல்மான் கான் - பிரம்மிக்க வைத்த ஆளுமை ! -Rafeeq


 ‘ஸ்டேடஸ்’ போட்டுவிட்டு சும்மா ஐந்து நாள்கள் காத்திருந்தேன்.

என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆவலில்!  பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவே இல்லை!

ஆனாலும், உள்பெட்டியில் சரவெடிகள்!

ஒருவர் சொன்னார், “ உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல, ஆனாலும் தயங்கியே தான்ங்க லைக் போட்டேன்.”

இன்னொருவர் சொன்னார், “ என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே எழுதிக்கொண்டு இருந்தீர்கள்?”

மூன்றாமவர் சிவகாசி போல, “ ஏங்க அஞ்சு செ.மீ., டயலாக் பேச 50 டேக் வாங்குபவரெல்லாம் ஆளுமையா? பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம்?? ஏதாச்சும் உருப்படியா எழுதுங்க!!”

அதுமட்டுமன்றி, சாதாரணமாய் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும்  நட்பு வட்டத்திலிருக்கும் சிலபல ஆசிரியப் பெருந்தகைகளெல்லாம் கூட ‘ஆப்ஸென்ட்’!

ஆக, ஒரு பெயரை மட்டும் வைத்து முடிவினை இறுதி செய்வதில் இன்னும் தீர்க்கமாய் இருக்கிறோம் என்பது மட்டும் உறுதியானது.

சரி, யார் இந்த சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமை?  பார்க்கலாம

'அதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்!” என்று நம்ம ஊரு பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கடக்கும் நம்மிடம் வந்து, “ஏம்பா ’பில்கேட்ஸ்’ன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறாயா?” என்று யாராவது கேட்டால் எப்படி இருக்கும்??

Saturday, December 6, 2014

எழுதி என்ன பயன்?


எழுதி என்ன பயன்?
எவரை அடைய வேண்டுமோ
அவரை அடையா எழுத்தை
எழுதி என்ன பயன்?

பேச்சாளன், செயல்வீரன்,
எழுத்தாளன் இல்லாத-நான்
எழுதி என்ன பயன்?

எத்தனையோ பிழைகள்
என்னோடும் என்ற பின்
எழுதி என்ன பயன்?

பலகீனஞ்சில தோல்வி பல
கொண்ட கண்ட - நான்
எழுதி என்ன பயன்?

இன்னும் எத்தனை கேள்விகள்!
இறுதியில் ஒரே கேள்வி
எழுதி என்ன பயன்?

காந்தி இதை அன்று
கேட்டு இருந்தால் இன்று
"சத்தியசோதனை" இல்லை

நேரு கேட்டு இருந்தால்
"டிஸ்கவரீ ஆஃப் இன்டியா"
நம்கையில் இல்லை.

மார்க்கோ போலோ கேட்டு
இருந்தால் தமிழர் வரலாறு
இன்று உருமாறி புராணமாய்!

தொடக்கத்தில் எவரும் புள்ளிகளே,
தொடங்கிய பின் புத்தகமாக
நல்லோர் படிக்கும் பாடமாக..

ஆம் எழுத்தின் அவசியம்
இருக்கிறது இன்றும், என்றும்.
ஏற்பது காலத்தின் கைகளில்!

ஆம் எழுதி என்ன பயன்?
கடமையைசெய் பலனைதேடாதே...!
கவிதை ஆக்கம் Rafeequl Islam T

Friday, December 5, 2014

தூரதேசத்து சொந்தங்கள்....! (அரபு அமீரக அபுதாபி துபாய் படங்கள் இணைப்புடன் ) -ராஜா வாவுபிள்ளை

நினைவுகள் நிழலாடும்
நிதானித்து நினைக்கும்
நின்று நினைத்து
நிம்மதி தேடும்

மனவழி தொடர்புகள்
நேரில் காணல்கள்
உள்ளோட்ட புரிதல்கள்
நிதர்சன நடமாட்டங்கள்

தேடி ஓடும்
கண்டதும் ஒட்டும்
ஆனந்த மழை பொழியும்
காலம் கதைகதையாய் சொல்லும்

விதியின்படி விரிந்த உலகில்
பிரிந்து கிடந்தாலும்
இணைக்கும் பயணப்பாலங்கள்
பின்னிப் பிணைக்கட்டும் சொந்தங்களை

Thursday, December 4, 2014

சீர்காழின் தொழில் நகரம் 'தைக்கால்'


பிரம்பு பொருட்கள் செய்வதையே
பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும்
# தைக்கால் கிராமம்
சீர்காழிக்கு அருகில் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில்
சீர்காழிக்கு முன்பே
கொள்ளிடம் அருகே
சாலையின் இருமருங்கிலும்
சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு
வியாபாரம் கெளிக்கிறது!

Tuesday, December 2, 2014

விநோதமான ஒப்பந்தம் -ரஃபீக்


அ. கீழே சொல்லப்பட்டவைகளுக்கு நீங்கள் உறுதியேற்க வேண்டும்

    என்னுடைய உடைகள் நல்லமுறையில் சலவை செய்து அடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
    என்னுடைய அறையில் 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட வேண்டும்.
    என்னுடைய படுக்கையறை மற்றும் படிக்கும் அறை தூய்மையாக பராமரித்தல் வேண்டும். குறிப்பாக என்னுடைய மேசை என் பயன்பாட்டிற்குத் தவிர வேறொரு பணிக்குமில்லை.

துபாயில் தேசிய நாள் கொண்டாட்டம்


மழலைக் கரங்களின் மாவோவியம்..!!

மாவிலே கலைவண்ணம்;
மழலைக் கரங்களின் மாவோவியம்..!!

அதுதான் எனக்கு ஆச்சர்யம்,
க்ரையான்ஸ் கலர் பென்சில்களை ஷார்ப்னர் கொண்டு ஷார்ப்பினார்கள்,
உதிர்ந்த துகள்களை நசித்து வண்ணம் தோய்த்தார்கள்..!!

#ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ",இப்படியா அப்பாலும் பிள்ளைகளும் சேந்து வீட்ட கந்தரகோலமாக்கறது"



என் மகள் மாவில் படைத்த
ஸ்ட்ராபெர்ரிப்பழக் கவிதையும் பாம்புக் கவிதையும்..!!

‪#‎குழந்தைங்க‬ சொன்னா சரியாத்தான் இருக்கும்.





                                                        நிஷா மன்சூர்

 உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் பண்பு உயர்வானது .வாழ்த்துகள்
 Mohamed Ali


Sunday, November 30, 2014

ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன, செல்ல வேண்டிய தூரம் உள்ளது,


பிறந்தநாளும் கொண்டாட்டங்களும் பின்னே நானும்..!!

-நிஷா மன்சூர்

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.
என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும்
எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில்
எல்லாம் மறைந்துபோயின
குடும்பம் குழந்தைகள் என்றானபின்
சில புன்னகைகளுடனும் மெல்லிய
வாழ்த்துக்களும் வருடிப்போயின

உலகம் உன் கையிலடா....!(தொடர் - 2)-ராஜா வாவுபிள்ளை


உயிரும் உணர்வும் உண்மையடா!
*** பிறப்பும் இறப்பும் இயற்கையடா!
வாழ்வின் நெறியை வகுத்துக்கொண்டால்
*** நிறைவுகள் நிறைந்த உலகமடா!!

நல்லோரும் தீய்யோரும் உண்டுமடா!
*** நன்மையும் தீமையும் நிறைந்ததடா!
நல்வழிப் பாதையை அறிந்துகொண்டால்
*** நட்புகள் நாடிவரும் உலகமடா!!

வளர்ச்சியும் வளங்களும் வளருமடா!
*** வானளாவ புகழும் சேருமடா!
நேர்மையாய் தொழிலை நடத்திவந்தால்
*** நலமாய் வாழவைக்கும் உலகமடா!!

இயற்கையும் செயற்கையும் இணைந்ததடா!
*** வல்லமையும் இயலாமையும் இருக்குதடா!
பகுத்தறிந்து வாழப் பழகிக்கொண்டால்
*** கல்லாமல் பாகம்படும் உலகமடா!!

உயர்வும் தாழ்வும் நிலைக்காதடா!
*** சீரான வாழ்க்கை வேண்டுமடா!
நேரானபதை வழிநடந்து சென்றால்
*** இறைவனடி சேர்க்கும் உலகமடா!!

Saturday, November 29, 2014

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?




யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.

// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr

'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.

Friday, November 28, 2014

OPEN DAY – Rafeeq / திறந்த நாள் - ரபீக்

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.

முதல் பெண்மணியான அதிபரின் மனைவியின் உடையின் வடிவமைப்பு மற்றும் அதனை வடிவமைத்த நிபுணர்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே அதன் காரணம்.

2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமா அணிந்துவரும் உடைபற்றி, அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் தயாரிப்பில் உருவான பல ஆடைகள் அவரின் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றிரவு விழாவின் மேடையில் தோன்றும் வரையிலும் தேர்ந்தெடுத்த உடைபற்றிய தகவலை மிச்செல் ஒபாமா வெளியிடவில்லை.

பிறகு, அவர் அணிந்துவந்த ஆடையின் வடிவமைப்பிற்குச் சொந்தக்காரர் 27 வயதே ஆன ஜாஸன் வூ எனும் கலைஞர் என்று தெரிந்த பிறகு அனைவரும் வியந்தனர்.

Thursday, November 27, 2014

வாழ்க்கையில் சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.

1994 ஆம் ஆண்டு, பிழைப்புக்காக சொந்த நாட்டை விட்டு அயல் நாடான அரபு தேசத்துக்கு வந்த காலம்.

அந்த காலக்கட்டத்தில் தொலைத் தொடர்புகள் அவ்வளவாக இந்த நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

கடிதங்கள் மூலமே குடும்பத்தார்களோடு தொடர்பில் இருந்த காலமது.
தொலைப்பேசியில் பேசவேண்டுமென்றால் தொலைப்பேசிக் கூடங்களுக்கு சென்றுதான் பேசமுடியும். ஒரு நிமிடத்துக்கு 600 பில்ஸ்.
அது என் போன்றோருக்கு பெருந்தொகை. தேவையான தொகைக்கு கார்டுகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.

Wednesday, November 26, 2014

மரணம்./ - சேவியர்


எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.

எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.

ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.

அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.

அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.

அல்லது
நிழலின் நிஜம் போல.

- சேவியர்

ஆற்றுப ்படுத்து..

காலைக் கதிரொளியில்
மஞ்சள் நீராடி
கண்ணாடி மேனி மறைக்க
முகிலாடை தனையுடுத்தி

நாணல் நுழைந்து
நற்கூந்தல் சிகை முடிந்து
ஆதவப் பூதனையே
அழகழகாய் தலைச்சூடி

தானே தனக்கு - நிஷா மன்சூர் / ஓர் விமர்சனப் பார்வை: -தாஜ்தீன்

உறவென்று ஒதுங்கி நிற்க ஓரிடமில்லை,
நட்பென்று தலைசாய்க்க நாதியில்லை,
மனம்விட்டுப் பாராட்ட எவருக்கும் மனதுமில்லை,
தானே விழுந்து, தானே துடைத்துக்கொண்டு
தானே வேர்பிடித்து, தானே கிளைபரப்பி
தானே தன்னைத் தாங்கி அரவணைத்து
தானே தன்னைப் பாராட்டி மகிழ்வித்து
தானே வளரும் காட்டுச்செடியாக
தானே தன்னையறிந்து
தன்னுள் சுகித்து
தானே தானே தந்தானே
தன்னைத்தானே தந்தானே...!!

உலகம் உன் கையிலடா....! - ராஜா வாவுபிள்ளை

 முரண்கள் முற்றிய உலகமடா!
=== முரண்டுகள் பிடிக்கும் உலகமடா!
முயற்சியை இகழ்ச்சியின்றி செய்துவிட்டால்
=== உன்முன்னே மண்டியிடும் உலகமடா!!

ஏழைபாழைகள் வாழும் உலகமடா!
=== ஏமாற்றிப் பிழைக்கும் உலகமடா!
தர்மம் தலைகாக்கும் புரிந்துகொண்டால்
=== இடுக்கண் களைந்துவிடும் உலகமடா!!

ஏற்றத்தாழ்வு நிறைந்த உலகமடா!
=== வேற்றுமைகள் பாராட்டும் உலகமடா1
ஒற்றுமையை பற்றிப்பிடித்துக் கொண்டால்
=== வறுமையையே ஒழித்துவிடும் உலகமடா!!

Monday, November 24, 2014

நிகழ்வுகளில் பரவும் விஷம் -நிஷா/ நிஷா மன்சூரின் கவிதையும் தாஜின் விமர்சனமும்::

மிகுந்த தீர்மானத்துடன்
பாரபட்சமற்றிருக்கும் சாவு
தன் தடயங்களை
இச் சகதியுள் பதிந்திருக்கும்
கூர்முட்களின் வடிவில் வெளிப்படுத்துகிறது

என் விரலிடுக்குக் காயங்களின்
சீழ்வடிந்து
அலுவலக வெண்லெட்ஜர்கள்
அசுத்தமாகிக் கொண்டிருக்கின்றன

என் தயக்கமான பேச்சின்போது
தொடர்ச்சியான கட்டுப்படுத்தல்கள்
எவற்றிற்கும் சிக்காமல்
ரத்தத்துளிகள் பீறிட்டுத் தெறிக்கின்றன….
(அப்போது பரவும் கெட்டுப்போன மாமிசவாடை
உங்களை மிகவும் சிரமப்படுத்துகிறது)

இச்சிவந்த கண்கள்
எந்த நேரத்திலும் வெடித்துப்பிதுங்கி
வெளிவரக்கூடும்
(தூக்கமிழந்த நாட்களின் எண்ணிக்கை
ஒரு முழு டைரியை விழுங்கிவிட்டது)

நீண்ட நீண்ட பயணங்களின் விளைவாய்
நைந்துபோயிருக்கும் பிருஷ்டங்களை
பட்டுத்துணி போர்த்தி
அமர வைத்திருக்கிறேன்

எந்தப் படிகாரங்களாலும் களையமுடியாத
தீவிரமான அழுக்கு படிந்து
என் இதயம்
மேலும் மேலும் துருவேறிக் கொண்டிருக்கிறது.

எனினும்
கடந்த மூன்று நாட்களாய்
இப்பாறையைப் புரட்டிப்போட
முயன்று கொண்டிருக்கிறேன்….
சூரியக் கதிர்கள் உட்புகா அடிப்புறத்திலிருந்து
ஈர வாசனையுடனும்
தனிமை குலைக்கப்பட்ட சீற்றத்துடனும்
ஒரு தேளோ,பூராணோ வெளிப்பட்டால்
மிகுந்த மகிழ்ச்சியடைவேன்…!!
நிஷா மன்சூர்

-கணையாழி-1995
*

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 5.

60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த தருவாயில் இருக்கும் நாட்டின் ஒரு சிறிய ஊர் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது.

போரில் ஊனமுற்றவர்கள், கண்ணி வெடிகளால் பாதிக்கப் பட்ட அப்பாவி பொதுமக்கள் அப்பப்பா அவ்வளவும் கொடுரங்கள்.
போர் என்பதே அழிவின் அரங்கேற்றங்கள் தானே?

போரில்லா பெருவாழ்வை எல்லாம் வல்ல இறையோன் உலக நாடுகளுக்கு அருளவேண்டும்.

எங்களது அடுத்த கட்டப் பயணம் மெரிடி எனும் ஊரை அடைவது.
புறப்படும் முன்னர் நாங்கள் இரவு தங்கிய நார்வேஜியன் நாட்டு தொண்டு நிறுவனத்தாரிடம் வழி விபரங்களை விசாரித்து தெரிந்து கொண்டோம்.
அதாவது போரின்போது வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் ஐ நா சபையின் உதவி கொண்டு முழுவதுமாக நீக்கப் பட்டுவிட்டது. செம்மண் சாலையும் தரம் செய்யப்பட்டு பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறது.

இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு இலைகள் இல்லை


வசந்த காலம் வந்தபோது உறவுகள் பூத்துக் குலுங்கினார்
இல்லாத காலம் வந்தபோது உறவுகள் உதிர்ந்துப் போயினர்
எதிர்கலாத்தில் உறவுகள் இல்லாத நிலையில் போகுமோ
காலங்கள் மாறும் நன்மைகள் நிகழுமென நினைத்திருந்தேன்
வசந்த காலமும் வருமென காத்திருந்தேன்
வசந்த காலமும் வறண்ட காற்றை வீசியது
காலத்தின் மாற்ற நிலை நிகழ்ந்ததால்
இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு
இலைகள் இல்லாத நிலையில் என்னிலையானது
-முகம்மது அலி 
Mohamed Ali


"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு."- ஔவையார்

Saturday, November 22, 2014

நான் - தாஜ்

உதயத்திற்கு விரைய
பேரொளி மறைகிறது!

இரவென்று தூங்க
உச்சத்தில் அது
பிரகாச வீச்சாகிறது!

தாவி குன்றேறியும்
பாதாளமே பார்க்கிறேன்!

'எந்தவொரு சூழலிலும் ஒரு பெண்ணுடைய சுயம் தொலையாமல் இருப்பதுதான் முக்கியம்.''

 கதையல்ல, வாழ்க்கை!
ஒரு காதல் கதை

பிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா…” அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல். கேட்கும் யாருமே மயங்கிவிடுவார்கள். சுசிலா மட்டும் விதிவிலக்கா என்ன?

“வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். சுசிலாவின் அப்பா கம்யூனிஸ்ட்டு கட்சி, தொழிற்சங்கம் என்று தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவர். முற்போக்கான குடும்பச் சூழலில்தான் சுசிலா சிறுவயதிலிருந்தே வளர்ந்தார். எனவே அவர்களது வீட்டில் எப்போதுமே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷம்தான். நிறைய தோழர்கள் வருவார்கள். காரசாரமாக அரசியல் பேசுவார்கள். போராட்டங்களை திட்டமிடுவார்கள். புரட்சிக்கு நாள் குறிப்பார்கள்.