Thursday, February 7, 2013

உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்!

வேர் வழி  நீர் மரத்தை வலுவூட்ட
தொப்புள் கொடி வரும் சத்து சிசுவை வளர்க்க
உண்ட உணவில் சத்தாய் வந்தடைய உருவாகி
வயிறை விட்டுப்  பிரிய தொப்புள் கொடி அறுபட்டது

உன்னுடலில் உருவாகும் பால் எனக்காக உருவாக
உருவாகும் பாலை  உயிர் வாழ உவகையுடன் தந்தாய்
உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்
உருவாகும் பாலை தருவதை நிறுத்தி பால்கட்டி நடுங்குகின்றாய்

உன்  பால் நான் குடிக்க உயர்வாய் இருப்பேன்
உன்பால் உயிராய் இருப்பேன்
உன் பால் உன்னிடமே இருக்க உன் மேனி கெடும்
உன்பாலை ஊர வைத்தவன் உனை வருத்துவான்

பாலைத் தந்தவன் ஒருவனிருக்க
பாசமிருந்தும் பாலைத் தர மறுப்பதேன்
ஈராண்டு பாலை கொடுத்து எனை வளர்த்தால்
ஈன்ற பால் எதிர் கொல்லி நாசினியாக இருந்து எனை வளர்க்கும்

உன்பாலைவிட உயர்வான பாலுண்டோ!
உவகையாய் எனைப் பெற்று உன்பால் உறிய இசைந்திடு
தாயாய் பெண்பாலாய் இருக்க
தாய்ப் பாலின் மகிமை அறியாததேன்!

தகப்பனை முன்னிறுத்தி பெயரிட
தாயின்  பெயரை முகமூடிட்டு மறைப்பதேன்
தகப்பன் அடித்தளமாக நின்றாலும்
தாயே கட்டிடமாகியது

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

உன் பால் நான் குடிக்க உயர்வாய் இருப்பேன்
உன்பால் உயிராய் இருப்பேன்
உன் பால் உன்னிடமே இருக்க உன் மேனி கெடும்
உன்பாலை ஊர வைத்தவன் உனை வருத்துவான் // அருமையான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

mohamedali jinnah said...

மிக்க நன்றி நண்பர் S. சுரேஸ்
(s suresh) அவர்களுக்கு