Wednesday, May 2, 2012

அம்மாவின் ஆற்றாமையும் அவரது அவசியமான பொய்யும்!

அன்பு மகனே உன் வருகைக்காக வழிமேல் விழி  வைத்து காத்திருந்தேன். என் மகன் பெரிய படிப்பு படித்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்து முதல் சம்பளம் இன்று வாங்கி வருவான் அதில் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்து இறைவனைத் தொழுது அந்த தொகையில் ஒரு பங்கை தர்மம் செய்வதோடு உறவினருக்கும் கொடுத்து ,மற்றொரு பங்கை உனது மேல்  படிப்புக்காக வாங்கிய கடனில் சிறிது கொடுத்து மீதி உள்ளதனில் சிறிது மாத செலவுக்கு சேமிப்பதோடு   மகிழ்வுடன்  நாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு  நல்ல உணவு சமைத்து சாப்பிடலாம் என்ற நினைவோடு இருந்தேன் . நான் நினைத்ததை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.
  பலமணி நேரங்கள் நானும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருந்தோம். மாலை நேரம் முடிந்தது. இரவு நேரமும் வந்தது. நீ வந்த பின்புதான் அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும்  முடிவுடன் இருந்தோம். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது . ஒவ்வொருவராக அயர்ந்து போய் உண்ணாமலேயே இருந்த இடத்திலேயே அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் மட்டும் உறங்காமல் உன் நலம் நாடி இறைவன் பெயரைச் சொல்லி ஓதிக் கொண்டிருந்தமையால் நடுநிசியில் நீ வந்து வாசற் கதவை தட்டும்போது மலர்ந்த முகத்துடன் உன்னை வரவேற்றேன். 'ஏன் இவ்வளவு நேரம்! உன் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்களே நேரத்திற்கே வீடு வந்திருக்கலாமே' என்றேன்!   'அம்மா நான் வருவதாகத்தான் இருந்தேன் ஆனால் என்னோடு  வேலை செய்யும்  நண்பர்கள் என்னை அவர்களுக்கு முதல் சம்பளத்தில் ஒரு விருந்து கொடு என்று பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரர்கள். நான் வாங்கிய சம்பளத்தில் பாதி செலவழிந்து விட்டது' என்றான்.
 நான் போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதே என்ற  ஆற்றாமை மனதில் இடியாகத் தாக்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'நீ இதனை சொல்ல வேண்டாம் மாதக் கடைசியானதால் விடுபட்ட வேலைகளை முடிக்க நேரமாகிவிட்டது மற்றும் பாதி சம்பளம்தான் தந்தார்கள் மீதியை அடுத்த மாதம் தருவதாக சொல்லியுள்ளார்கள்'  என்று சொல்லிவிடு என்றேன்.
 பெற்ற மனது மகனுக்காக பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது.
 தவறான காரியம் நிகழாமல் தடுக்கவும், நல்லவரைக் காப்பாற்றவும் மற்றவருக்குள் சமாதானத்தினை உருவாக்கும்  எண்ணத்தோடும் அதனால் ஒரு நல்ல காரியம் நிகழுமென்றால் பொய் சொல்லலாம். குடும்பத்திற்குள் ஒரு கவலை வராமல் இருக்க குடும்பத்தில் உள்ளோர் மகிழ்வுக்காக தாய் தனது மகனுக்காக சொல்லிய பொய்யை இறைவன் மன்னித்தருள்வான். அவன் மிக்க கருணையுள்ளவன்.


 அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!(குரான் 17:23)

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! குரான் 17:24)
 



Mother.pps View Download 

  parentswish.pps View Download
    
The teachings of the Holy Qur'an for the Child to follow during his life is: "Your Lord (Allah) has ordained that you should worship none except Him and show kindness to parents. If one of them or both of them attain to old age with you, say not 'Fie' unto them nor reproach them but speak to them a gracious word. And lower unto them the wing of submission through mercy (defer humbly to them out of tenderness) and pray: My Lord, have mercy on them both as they nurtured me when I was little."

4 comments:

ப.கந்தசாமி said...

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்ற குறளுக்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள் உங்கள் அன்னை. வாழ்க அன்னை உள்ளம்.

mohamedali jinnah said...

அருமையான கருத்துரை தந்த டாக்டர் அவர்களுக்கு நன்றி

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

kamakshi said...

nce one brother jazak allahu khair