Wednesday, May 30, 2012

சர்வாதிகாரம் இஸ்லாத்தில் கிடையாது ! ராணுவ ஆட்சியையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

சர்வாதிகாரம் இஸ்லாத்தில்  கிடையாது. நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசினை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

  இறைவனால் அருளப்பட்ட  மார்க்கம் இஸ்லாம். அது ராணுவ ஆட்சியை
ஆதரிக்கவில்லை. அதுபோல்  இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப் படுத்தி இணைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அது அனுமதிக்கவுமில்லை

    "(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்." (2:256)

  யாரும் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் அவர்கள் சுய சிந்தனையோடு அவர்கள் விரும்பியே இஸ்லாத்திற்குள் இணைவதனை இஸ்லாம் விரும்புவதுடன் அதுதான் இஸ்லாமிய சட்டமாக உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் ஒரு முஸ்லீம் இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகாரியாக இருந்து தனது ஆட்சியை திணிக்க உரிமை கிடையாது..

    முஹம்மது நபிக்குப் பிறகு இஸ்லாத்தில் வந்த நான்கு கலிபாக்களும் மக்களால்,சஹாபாக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் பரவலான ஆதரவும் மற்றும் மரியாதையும்  பெற்று ஆட்சி செய்து மகிழ்ந்தனர். ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)ஹஸ்ரத்உமர்(ரலி),ஹஸ்ரத் உதுமான்(ரலி),மற்றும் ஹஸ்ரத்அலி (ரலி)சமூகத்தின் நம்பகமான பெரியவர்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)திறந்த பொது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலிப் அமீர் முவையா சரியாக வழிநடத்திய ஆட்சியாளர். அமீர் முவையா தனது  மகனை தன்னிச்சையாக   ஆட்சி செய்ய நியமனம் செய்தார்.  அமீர் முவையாவின் மகனார் முறையற்ற வழியில் ஆட்சியை கைப்பற்றி தவறான இராணுவ ஆட்சி செய்ததால் அதனை எதிர்த்துப் போராடிய நபியின்  சொந்த பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மற்றவர்கள் வேண்டுதலுக்கு இணங்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உண்டானது.

 இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.(42:38)

    குரானும் நபிவழியும்தான்  முஸ்லிம்களுக்கு வழிகாட்டி. அதன்படி வாழ்பவனே முஸ்லிம். எதேச்சையான அதிகாரத்திற்கும், ராணுவ முறையில் ஆட்சியை கைப்பற்றுவதும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாததினால் இஸ்லாமிய கிராமங்களில் கூட தொன்றுதொட்டு மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒருவர்தான் வழி நடத்தப் பட அனுமதிக்கப்படுகின்றார். அது 'முத்தவல்லி'யாகவோ அல்லது  நாட்டாண்மை பஞ்சாயத்தாக மற்றும் நிர்வாகத்தினராக  இருந்தாலும் இதுதான் இஸ்லாம் காட்டிய வழி. இந்த நிலை இருக்கும்போது எந்த ஒரு நாட்டையும்  ராணுவ முறையில் ஆட்சியைக்  கைப்பட்ற இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தவறான முறையில் ஆட்சிக்கு வருவதனை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது .

 பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப் பெருவதனைப் நாம் பார்க்கின்றோம். ஏன் சில முஸ்லீம்கள் மக்களாட்சி  பற்றி ஆர்வமாக இல்லை? மக்கள் விருப்பப்படியா பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப்பெருகின்றது?  அதிகாரத்தை மக்கள் இருந்து எடுக்கப்பட்டது யாருடைய "ஆலோசனை"?

 இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும்  உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் முறைதான் மகிழ்ச்சியடைய வைக்கும் .இது அனைவருக்கும் பொருந்தும்.

 சர்வாதிகாரர்களின்   ஆட்சி கேவலமான முறையில் வீழ்த்தப் படுவதனை உலகம் கண்டுதான் வருகின்றது, இவர்கள் முறையற்ற முறையில் ஆட்சிக்கு வந்தாலும் தவறான முறையில் ஆட்சி செய்தாலும் மக்களிடமும் இறைவனிடமும் பதில் சொல்லியாக வேண்டும், அதற்கு துணைபோபவர்களும் விடுபடமாட்டார்கள். முசோலினி, ஹிட்லர் போன்றவர்களும்  கடைசியில் தோல்வியைத்தான் தழுவினார்கள்,உலகத்தில் இப்பொழுதும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில்    அதே நிலை தொடர்கின்றது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். வேண்டாம் தவறான பாதை. வாழுங்கள் வாழவிடுங்கள்.   சர்வாதிகாரம் இஸ்லாத்தில்  கிடையாது. ராணுவ ஆட்சியையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.No comments:

LinkWithin

Related Posts with Thumbnails