Tuesday, May 8, 2012

மணமகள் இருக்குமிடமெல்லாம்....!

 மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.
 இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு! 
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23
"எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."
-திருக்குர்ஆன் 24:4
 திருமண மேடைக்கு வாழ்த்து சொல்ல அழைக்கப்பட்டவர் அரசியல்,மற்ற கதைகளும் சொல்வார்கள். ( இவர்கள் 'எப்படா முடிப்பார்கள்' என்று முனு முனுப்பவர்கள் உண்டு)              
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடக்கும் ஒப்பந்தம். அதோடு சரி. தேவைக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்திற்கு ஒரு சான்று பத்திரம்; அத்தோடு முடிய வேண்டியது.
சமூகத்தில் நமது மகள்கள் திருமணம் செய்து கொடுக்க  எத்தனை வகை  பரிசு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.  காலணிகள் முதல்  ஒரு நூறு ஆடைகள், மின்சார கருவிகளும், குளிர் சாதனப் பெட்டி,'ஸ்பிலிட்ஏசி' (split a.c) மற்றும் மரச்சாமான்கள், தங்கம், வெள்ளி. வைர நகைகள், ஒரு வாகனம், மாப்பிள்ளையின்  குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பரிசுகள் இப்படியே முடிந்தவரை சுருட்டும் பகிரங்க கொள்ளை.பெண்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய கடமைப் போய் பெண் வீட்டாரிடமே அதிகாரப் பிச்சை வாங்குவது நடைமுறைக்கு வந்தது மிகக் கேவலமான ஒன்று.
 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
 யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள்   இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.   பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் நம் வசதிக்கேற்ப அதிகமான பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது.
வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27)
உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர். அல்குர்ஆன் (17:29)

4 comments:

ஸாதிகா said...

யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள் இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.///அருமையான ஆக்கம்.

mohamedali jinnah said...

சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி தங்களது கவனமாக படிப்புக்குப் பின் கருத்துரை தந்தமைக்கு

அறம் கற்க கசடற said...

மஹர் கொடுப்பது அல்லாஹ் விதித்த வரம்பு

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. Al-Quran 4:14

இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.al-quran2.16,

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் எமக்கும் எம்-இஸ்லாமிய சமூகத்தாருக்கும் அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக. அமீன்.

ப.கந்தசாமி said...

எப்படியோ சிலரிடம் செல்வம் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது. அவர்கள் அந்தச் செல்வச் சிறப்பை பறைசாற்ற கல்யாணங்களை ஒரு வழியாகக் கருதுகிறார்கள். அதனால் வரும் விளைவே இது.

இதில் மற்றவர்களும், புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்ட கதையாக, ஆடம்பரத்தை விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கொடுக்கும் விலையோ சக்திக்கு மீறியது.

சமூக நலன் கருதி வசதியுள்ளவர்கள் ஆடம்பரத்தைக் குறைக்க முன் வரவேண்டும். வருவார்களா?