Tuesday, May 29, 2012

இமாம் கஸ்ஸாலி+Mohammad Ghazali - Medieval Persian Scientist and Philosophers

இமாம் கஸ்ஸாலியின் இரக்ககுணம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

ஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான் தயாரிக்கப்படும்.

ஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.
Source : http://allaaahuakbar.blogspot.in/
 

Please click here to read more


1 comment:

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னுடைய பதிவை இங்கு லின்குடன் தந்து மேலதிகத்தகவல்கள்,ஒளி ஒலி கட்சியுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோ.

இமாம் கஸ்ஸாலியின் பேரறிவை நூல்களில் படித்து வியந்துள்ளேன்.படத்துடன் பகிர்ந்தது மிக்க மகிழ்சி