யாருக்கு பயப்பட வேண்டும். இறைவனுக்கா! வெறும் அச்சமும் பயமும்
நம்பிக்கைத் தராது அத்துடன் அது நீடித்தும் நிற்காது. இறைவனுக்கு
அச்சப்படக் கூடாதா ? அச்சத்தினால் நேசம் விளையாது. முதலில் அறிந்துக் கொள்
பின்பு நேசி. நேசமும்,அன்பும் வந்தால் மரியாதை வரும் பின்பு உண்மையான
நம்பிக்கை வரும், அதன் பின் அவன் சொன்னதெல்லாம் நம்பி வாழ்கையில் நடைமுறை
படுத்துவாய். அதனால் தவறு செய்ய நாட்டம் வராது. அதனால் அச்சம்
ஒருபோதுமில்லை. உன்னை அறியாமல் தவறு செய்து விட்டாலும் கருணை மிக்க
இறைவனிடம் நான் இனி தவறு செய்ய மாட்டேன் அந்த தவறும் நான் விரும்பி செய்த
தவறல்ல என உளமார மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னித்து விடுவான் என்ற
நம்பிகையுடன் கேள் அவன் மன்னித்து விடுவான். தவறிலும் இரண்டு வகை உண்டு.
ஒன்று நமக்கும் இறைவனுக்கும் சம்பந்தப்பட்டது. அந்த தவறுக்கு இறைவனிடம்
மன்னிப்பு கேட்டால் அவன் மன்னிப்பான் . மட்டொன்று மனிதனுக்கு இடையே
நிகழ்வது .அந்த தவறுக்கு முதலில் யாருக்கு தீங்கிழைத்தோமோ அவரிடம் முதலில்
மன்னிப்பு நாடிவிட்டு பின்புதான் இறைவனை நாட வேண்டும் இதுதான் இறைவனின்
நாட்டமாகும்
நான் சுவனத்தை விரும்பியோ நரகத்திற்கு பயந்தோ இறைவனை நேசிக்கவில்லை அவன்
என்னை இந்த உலகத்தில் குறை இல்லாமல் படைத்தானே அதற்காகவே அவனை நேசித்து
அவனைத் தொழுகின்றேன். அவனுக்குத் தெரியும் என்னை எங்கே கொண்டு சேர்ப்பதென்று. பின் நான் ஏன் பயப்படவேண்டும்.
இறைவனுக்கே பயப்படவில்லையென்றால் பின் ஏன் உடன் வாழும் மனிதனுக்கு
பயப்பிடுகின்றாய். தவறு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். தவறு
செய்யாமல் , மக்களுக்கு சேவை செய்து அன்பு பாராட்டி மகிழ்வாக வாழ்ந்துவிடு,
நல்லதைப் படி, நல்லதைப் பார் முடிந்தவரை உன் கற்பனையை தூண்டிவிட்டு எழுது . இருக்கவே இருக்கின்றது
'பேஸ் புக்' போட்டு மகிழ . அன்புடன் வாழ்த்துகள்
"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்
No comments:
Post a Comment