Friday, May 4, 2012

உங்கள் பெயர் என்ன? இதற்கு என்ன பதில்?

உங்கள் பெயர் கேட்டால் பல நாடுகளில் நம் பெயருடன் ஆணாக இருந்தால் தகப்பனார் பெயரும் இணைத்து சொல்ல வேண்டும் அதுவே பெண்ணாகவே இருந்தால் கணவன் பெயரை இணைக்க வேண்டும். அனைத்துக்கும் தகப்பனார் பெயர் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அல்லது இரண்டாவது பெயர் கேட்பார்கள். (Someone's second name is their family name, or the name that comes after their first name and before their family name.) 

தாய் எங்கே போனால்! அவள் பெறுவதும் வளர்ப்பதும் தான்  பெற்ற குழந்தைக்காக தன்னை அற்பணித்துக் கொள்வதோடு முடிந்து விடுகின்றதா!
குழந்தையை  வளர்க்க தந்தையின் பங்கும் இருக்கலாம் ஆனால் தாயல்லவா ஒன்பது மாதங்கள் சுமந்து நம்மை உருவாக்கினாள்.ஒரு தாய் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். தாய் பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து  அக மகிழ்ந்து ஆனந்தம் அடைவாள்   தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைகின்றது. அதனால் தாயோடு தந்தையும் இணைத்து பெயர் சொல்வதே பொருத்தம்.

 “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)


“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

தாயின்  பெயரை நாம் விடுவது மிகவும் வேதனைக்குரியது. ஏன் அவளது பெயரை யாரும் இணைப்பதில்லை? இந்த சிந்தனை இப்பொழுதும் வரவில்லையே ஏன்?
பெயரில் என்ன இருக்கிறது! என நினைக்க வேண்டாம். ரோஜாவோ, மல்லிகையோ பெயர் சொன்னால்தான் பூவின்  இனம் காண முடியும்.

 ‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

"தாயின் மடியில் சுவனம் உள்ளது" என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை. மாறாக  தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை  சுவனம் செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்கும். அந்த தாயின் பெயரை நம் பெயரோடு இணைத்துக் கொள்வது நம் கடமை. Abu Hurairah, may Allah be pleased with him, reported: A person came to Allah's Messenger (may peace be upon him) and said: Who among the people is most deserving my companionship (of a kind treatment from me?) He said: Your mother. He, again, said: Then who (is the next one)? He said: It is your mother (who deserves the best treatment from you). He said: Then who (is the next one)? He (the Holy Prophet) said: It is your mother. He (again) said: Then who? Thereupon he (The Prophet (peace be upon him)) said: It is your father.

2 comments:

ஸாதிகா said...
This comment has been removed by a blog administrator.
mohamedali jinnah said...

வஅலைக்கும் சலாம் வபரகாதுகு சகோதரி சாதிகா அவர்கள் தந்த அன்பு வாழ்த்துக்கு நன்றி
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”