இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் உத்தியோக பூர்வ இணையத்தளம் www.drshukri.net நேற்று 06-07-2011 இலங்கை தபால் தலைமையகத்தின் கேட்போர்கூட அரங்கில் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேர்காணல்
சமகால இஸ்லாமிய அறிவு ஜீவிகளில்முக்கியமானவராக கருதப்படும் கலாநிதி, எம். ஏ. எம். சுக்ரிஅவர்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாகஜாமிஆ நளீமிய்யா என்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார்.வரலாறு, இலக்கியம், திறனாய்வு, கல்வி, தத்துவம், இஸ்லாம், தொல்லியல் ஆராய்ச்சிஎன்று இவரது எழுத்துலகம் விரிந்தது. பன்மொழி ஆளுமை பெற்ற இவர் பன்முக அறிவுப் புலமைமிக்கவர்என்பதை அவரது எழுத்துப் படைப்புகள் சான்று சொல்லும். மற்றும் பன்நாட்டு சர்வதேச அரங்குகளில்இவர் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடனான செவ்விஜாமியா நளீமிய்யா வளாகத்தில் கலாநிதி அவர்களின் விடுதியில் 03.04.2003 வியாழன் அன்று எடுக்கப்பட்டது.
உங்களது காலப்பிரிவில் இருந்தLiberalArts ற்கும் தற்போதைய கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாடு என்ன? அது வீழ்ச்சியைக்காட்டுகிறதா? அல்லது அறிவு நிலையில்ஒரு வளர்ச்சியா?
முதலில் Liberal என்ற பதத்தால் நீங்கள்என்ன கருதுகிறீர்கள் என்பதை நான் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது சுதந்திரமாக கற்கின்றநிலை உங்கள் காலத்தில் காணப்பட்டது. உதாரணமாக மருத்துவத் துறையைச் சார்ந்தவர் வேறுதுறையையும் கொண்டவராக இருந்தார். ஆனால் தற்போது துறை சார்ந்து மட்டும் கற்கின்றவராகக்காணப்படுகின்றார். வேறு துறைகள் குறித்த அறிவு அங்கு அவருக்கு கிடைப்பதில்லை.
ஆம், உண்மையில் இந்த விடயம்எங்களுடைய காலததிலே நீங்கள் கூறுவதுபோல, ஒரு துறை சார்ந்தவர் வேறு துறைகளைப் பற்றிப் படிப்பதற்கான வாய்ப்புக்கள்அவ்வளவு இருக்கவில்லை. ஆனால், வாய்ப்புக்கள் இருந்தது. அது கல்வி முறையின் அங்கமாக இருக்கவில்லை, உதாரணமாக மருத்துவத்துறையைச் சார்ந்தவர் மருத்துவத் துறையைத்தான் படித்தார். கலைத் துறையைச் சார்ந்தவர்அதைத்தான் படித்தார். இதுதான் நிலவக் கூடிய கல்வி முறை. ஆனால் ஒரு முக்கிய பண்பு காணப்பட்டது.எந்தத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் வேறு துறையைப் பற்றிய அறிவைப் பெற ஆர்வம் காட்டினர்.அதற்கான வாய்ப்பும் இருந்தது. உதாரணமாக பொருளியல் துறையைச் சார்ந்தவர் இலக்கியத் துறையில்ஆர்வம் காட்டினார். இலக்கியத் துறை சார்ந்த பலர் அறிவியல் பற்றிய பல அறிவையும் பெற்றிருந்தார்கள்.இது அக்காலங்களிலே பல்கலைக்கழகங்களில் நடந்த கருத்தரங்குகளிலே, விவாதங்களிலே மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது. ஒரு துறையைச் சார்ந்தவர் வேறொரு துறைபற்றி பேசுவதற்கும்கருத்துக்கள் பரிமாறுவதற்கும் ஆற்றல் பெற்றவராக இருந்தார்.
Please click to read more about நேர்காணல்
No comments:
Post a Comment