Wednesday, July 20, 2011

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை. கொடுப்பதை விட வாங்குவது ரொம்ப கடினம். முதல் கோணல் முற்றிலும் கோணல் .முதல் முத்தமே செயற்கையானால் அடுத்த முத்தம் வர வழியில்லை. இயல்போடு மனதுடன் ஒன்றிய முத்தம் மன மகிழ்வினைத் தந்து உறவை வளர்க்கும். அது அழகைக்  கூட்டி ஆயுளை அதிகமாக்கும்.

முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும்  மாறுபடும்.     

   முத்தம் கொடுக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்படுவரின் மனதில் இடம் பிடித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அது மறுக்கப்படும். முத்தம் கேட்டுப் பெறுவதல்ல. கடையில் விற்கப் படும் பொருளாகாது.அன்பு, பாசம், நேசம் போன்ற வற்றை வெளிப்படுத்தவதற்கும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கும்  கிடைக்கும் மாமருந்து.முதல் முத்தம் அது அம்மா  தந்த முத்தம். அது பாசத்தில் கலந்த முத்தம்.அம்மாதான் நமக்கு  முத்தம் கொடுக்க சொல்லிக் கொடுத்தாள். முதலென்றால் கடைசி ..அதனை ஆண்டவன்தான் அறிவான்.  "எதிர்பாராத முத்தம்" இனிய நினைவு தரலாம். முத்தம் கொடுக்காதவர்களும் கொடுக்கப் படாதவர்களும் உலகிலில்லை.
  ஆண்களாகிய நீங்கள் மிருகங்களைப் போல் நடந்து (தாம்பத்ய உறவு) கொள்ளாதீர்கள் .(உறவுக்கு முன் )தூது அனுப்புங்கள்,அதன் பிறகு தாம்பத்ய உறவு கொள்ளுங்கள்  என்று நபி (ஸல்)கூ றியபோது,  தூது என்றால் என்ன?என்று நபித் தோழர்கள்  கேட்டார்கள். அது முத்தங்களைப்  பகிர்ந்துக் கொள்வதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை.   
       குழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப்  பாருங்கள்.
 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
 மகிழ்வின் வேறுபாடுகளை முகத்தில் காண முடியும். அகத்தின் அழகு  முகத்தில்.
  துர்நாற்றம்  மூலம் பிறருக்கு சிரமம் ஏற்படுத்துவது கூடாது.
எத்தனையோ பேருக்கு துர்நாற்றம் பிடிக்காது.  கணவன் வாயிலிருந்து அவை வந்தாலும் அது மனைவிக்கு துர்நாற்றமே. இதே துர்நாற்றத்துடன் மனைவியை முத்தமிட்டு கொஞ்சுவதோ, குழந்தைக்கு வாஞ்சையுடன் முத்தம் இடுவதோ… எப்படி சரியாகும்..?

 தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. தனித்து வாழ்பவன்  ஒன்று மிருகம் அல்லது துறவி (இந்த கால சாமியாரும் துறவியும் அல்ல )
படத்தினை அவசியம் இறுதி வரை பாருங்கள்


என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும் நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன் பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!

LinkWithin

Related Posts with Thumbnails