மயிலாடுதுறை வரலாறு நூல் வெளியீட்டு விழா .
முனைவர் அ.அய்யூப்
எழுதிய "மயிலாடுதுறை வரலாறு" என்ற அரிய நூலின் வெளியீட்டு விழா
.மயிலாடுதுறையில் ஜுன் 15 அன்று மிகச் சிறப்பாக நடந்தது.அய்யூப் அறக்கட்டளை நடத்தும் பெஸ்ட்கல்வியல் கல்லூரி வெளியிட்ட நூல் இது. ஏ. ஆர் .சி . விசுவநாதன் நூலை வெளியீட்டு பேசுகையில் "நமக்குத் தெரிந்த வரலாறுகள் நம்முடன் அழிந்துவிடும். ஆனால், இந்த நூல் காலந்தோறும் மயிலாடுதுறையின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கும்" என்று கூறினார்.
முனைவர் அ.அய்யூப் விழாவுக்கு தலைமை தாங்கினார். அவர் பேசும்போது "ஒவ்வோர் ஊருக்கும் நிச்சயம் வரலாறு இருக்கும் .அந்த வரலாறுகள் நூலாக வெளிவர வேண்டும் "என்று யோசனை சொன்னார்.
மதிப்புக்குரிய நீடூர் பெரியார் டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் "மயிலாடுதுறை வரலாறு" முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நூலில் பல (107) தலைப்புகளில் விவரமாக அருமையான கட்டுரைகளாக பொருத்தமான படங்களுடன் மயிலாடுதுறை வரலாற்றினை ஆசிரியர் அய்யூப் அவர்கள் அள்ளித் தந்துள்ளார் ."ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா " மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் காலம்தொட்டு குறிப்பிடப்படும் புகழ்வாய்ந்த ஊராக உள்ளது. மயூரபுரி என்பது மாயவரம் ஆனது என்றும் , மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இதுபோன்று பல விபரங்களை இன்நூலில் காணலாம்.
நம்ம ஊரு செய்தி
நம்ம ஊரு செய்தி / http://www.nammaooruseythi.comநம்ம ஊரு செய்தி பத்திரிக்கை நடத்துபவர் நீடூர் அய்யூப் அவர்கள்
"பயிற்சி பல தந்து - இந்தப்
பாறை உயர்த்திட வேண்டும்!"
என்ற கொள்கை கொண்டவர் முனைவர் அ.அய்யூப்.
அந்த நோக்கத்துடன் 2000 ஆம் ஆண்டில் அய்யூப் அறக் கட்டளையை அமைத்தார்.
நீடூர் பெரியார் டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்களின் அன்பு மகனார்தான்
முனைவர் அ.அய்யூப் அவர்கள். மரியாதைக்குரிய டி .எஸ். ஆர். அப்துல் மஜீது
அவர்கள் சிறந்த சிந்தனையாளர்,
சீர்திருத்தவாதி , சமய சமரச நோக்காளர். டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள்
தந்தை டி .எஸ்.ராஜ்முகம்மது
அவர்கள் நீடூரில் மிகவும் புகழுடையவர். இவர் மிகவும் நாணயமானவர். அவர் மீது
மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மரியாதைக்குரிய டி
.எஸ்.ராஜமுகம்மது அவர்களது சேவை மிகவும் உயர்வானதாக இருந்தமையால் அவர்
இறந்த பின்பும் அவரது புகழ் காலமெல்லாம் மறையாமல் நிற்கின்றது.
"மயிலாடுதுறை வரலாறு" நூல் கிடைக்குமிடம்.
நவமணி பதிப்பகம் ,44,எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை ,
சென்னை- 600018
No comments:
Post a Comment