Wednesday, July 13, 2011
தாலாட்டு ஃபாத்திமா - தமிழ் முஸ்லிம் பாட்டு by தேரிழந்தூர் தாஜுதீன்
ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டை கூட, அறிவையும்,வீரத்தையும் ,பண்பையும் சொல்லித் தரக் கூடிய சிந்தை குளிர வைக்கக் கூடிய பாட்டாக பாடுவது தமிழர் பண்பாடு.
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாயே உன் பிள்ளைக்கு இஸ்லாத்தை சொல்லி தாலாட்டு
அது தருகின்ற வழியில் வளர வேண்டும் என்று தாலாட்டு
அல்லா என் பிள்ளைக்கு அறிவை தா என்று தாலாட்டு
உலகில் அனைத்து செல்வமும் அடைத்து வாழ்க என்று தாலாட்டு
ஹசன் ஹுசைனார் வழியில் வளர்க என்று தாலாட்டு
அலியாரின் வீரத்தை பெருக வேண்டும் என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
கண்ணே மணியே கண்ணுறங்கு என்று தாலாட்டு
இறைவன் கருணையால் நல்ல கணவன் வருவான் என்று தாலாட்டு
காசு வாங்கி உன்னை மணக்க மாட்டான் என்று தாலாட்டு
அவன் கருத்தில் அடுத்த பெண்ணை நினைக்க மாட்டான் என்று தாலாட்டு
அழகு மகனே அயர்ந்து உறங்கு என்று தாலாட்டு
உன் அத்தாவைப் போல உழைத்துப் பழகு என்று தாலாட்டு
பல்லாயிரம் வாங்கி மணக்க வேண்டாம் என்று தாலாட்டு
நீ மணக்க போகும் பெண்ணின் மனசை வாங்கு என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
யாரையும் இழிவாய் நினைக்கக் கூடாதென்று தாலாட்டு
எந்த ஊரையும் பெயரையும் பழிக்கக் கூடாதென்று தாலாட்டு
உறவினர் பகைத்தால் பொறுக்க வேண்டும் என்று தாலாட்டு
அவர்கள் உறவுக்கு விளக்காய் இருக்க வேண்டும் என்று தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாலாட்டு ஃபாத்திமா தாலாட்டு
தாயே உன் பிள்ளைக்கு இஸ்லாத்தை சொல்லி தாலாட்டு
அது தருகின்ற வழியில் வளர வேண்டும் என்று தாலாட்டு
பாடல் எழுதியவர் கிளியனூர் அப்துல் சலாம்
பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன்
இன்னிசை(Music) இன்பராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Pakirvukku Nandri.
Post a Comment