Tuesday, March 29, 2022

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Haja Maideen அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 அன்புடன் வாழ்த்துக்கள்    Haja Maideen அவர்களுக்கு



உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

 

இறைவன் அருளால் Haja Maideen அவர்கள்  தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் 

Haja Maideen ஒருவர்! "

சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்

Haja Maideen அவர்களும் ஒருவராக இருப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்  

சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி கவிதைகள் புனைவதும் அதனை தனது இனிய குரலால் தானே இசையமைத்து பாடுவதும் இவரது இயல்பான செயல் .அவரது முகநூல் பதிவுகள் அதற்கு சான்று 

https://www.facebook.com/profile.php?id=100008879012795

Haja Maideen அவர்களை எங்கள் ஊரில் லண்டன் ஹாஜா என்றே பாசத்துடன் அழைப்பார்கள் .


அவரது குடும்பம் தற்போது லண்டனில் வசித்தாலும் தமது உறவுகளை நண்பர்களை பார்த்து மகிழ தாயகமான நீடூருக்கு வந்து செல்வார் .வந்தவுடன் உறவுகளையும் நண்பர்களையும் தேடித் சென்று பார்த்து மகிழ்வார் .

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

இம்முறையும் லண்டனிலிருந்து வந்தவுடன் வந்தவுடன்  என்னைப் பார்த்துச் சென்றார்

நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவர் அவரது அண்ணன் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார் .அவரையும் பல காலங்கள் கழித்து   சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது .




இறைவன் வசம் சென்ற அவரகளது தாய் தந்தையர்களை நான் அறிவேன்.அவர்களும் எங்களுக்கு உறவினர்கள்தான்

 .     

திரு Haja Maideen அவர்களுடன் உறையாடிக் கொண்டிருக்கும் போது பல நல்லவைகளை   அறிந்துக் கொள்ள முடியும்

நேரம் போவதே தெரியாமல் மென்மையாக பாசமாக பேசுவதிலும் நேசத்தைக் காட்டி  கொள்வதிலும் அவரது தொடர்ப்பு சிறப்பாக இருக்கும்

 Haja Maideen அவர்களை  வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .

இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவை

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.

நன்றி

அன்புடன் ,

முகம்மது அலி .



முகம்மது அலி



No comments: