சிங்கப் பெண்ணே,
புன்னகை பூவணிந்து
வாழ்வை வசந்தமாக்கு
வெற்றிச் சிறகுடனே
உலகை வலம் வரலாம்
வண்ணக் கனவுகளால்
பாதை வகுத்த பின்னே
பயணம் தொடங்கிவிடு
பயத்தை உதறிவிடு
வீழ்வது தவறல்ல
வீழ்ந்து கிடத்தலே வெட்கம்
துள்ளி எழுந்து விடு
துயரம் ஒடிவிடும்
வசீகரப் புன்னகையால்
வானத்தை வசப்படுத்து
வாழ்வது ஒருமுறைதான்
வாழ்ந்து காட்டுவோம் வா...
No comments:
Post a Comment