Friday, March 25, 2022

நாம் உயிரோடு வாழ்வதற்கு பிரியாணி சாட்சி

கீதா மோகன்

நன்றி விஜய் TV சூப்பர் Singer புகழ் Mannargudi Ramesh .....

ஏதோ விளையாட்டா கிறுக்குனதுக்கு தன் கம்பீரக்குரலால் பிரியாணியை பிசைந்தூட்டுகிறார் அருமை நண்பர் மன்னார்குடி ரமேஸ் ... 😬😬

அண்மையில் நானும் என் நெருங்கிய நண்பியும் எமக்குப் பிடித்த பாய் கடையொன்றில் பிரியாணியை பதம் பார்த்துக் கொண்டிருந்த போது அருகே இருந்த வானொலியில் அமர்க்களம் படத்தின் "மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு.... சில மின்னல்கள் என்னை உரசிப்போனதுண்டு..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது....

பிடித்தமான பிரியாணி லெக்பீசை கடிக்கையில் சட்டென அம்மெட்டுக்கு சில வரிகள் உதித்தன.... அதை அப்படியே எழுதிவைத்துக் கொண்டேன் ....

அடுத்த நாள் முகநூலில் பதிவாகவும் பதிவு செய்துகொண்டேன் ..... அதைப் பார்த்த நண்பர் ரமேஸ் SPB போன்ற தன் கம்பீரக் குரலால் பாடி அனுப்பி வைத்துள்ளார் ... இதைவிடப் பேறுண்டோ.... 😬😬

(நானும் பாடலாசிரியர் ஆவிட்டேன்.... தாமரை மல்லிகைலாம் ஓரமாப் போகவும்.

பர்கர்கள் என்னைத் தொட்டு போனதுண்டு

சில பீட்சாக்கள் என்னை உரசிப் போனதுண்டு

சைனீஸ் ரைஸ் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

குடல் பக்கென்று சிலபோது எரிந்ததுண்டு

பிரியாணியே உன்னைப் போல என்னை யாரும்

சிறுகுடல்வரை மகிழ்வித்துப் போனதில்லை

ஆக மொத்தம் என் வயிற்றில் உன்னைப் போல

பசி அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

புரட்டாசி வருமென்று தெரியும் பிரியாணியே

என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்

 சாமி கண்ண குத்துமென்று தெரியும் பிரியாணியே

என் பசிக்கு தயிர்சாதம் போட்டு அடக்க மாட்டேன்

பிளேட் தாண்டி வாசனைகள் வீசும் குஸ்காவில்

சிக்கன் லெக்பீசு துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்

துண்டு துண்டாய் உடைந்த லெக்பீசு எலும்பையெல்லாம்

அடி வயிற்றுக்குள் அரைத்து  தள்ளி விட்டேன்

பக்கத்து பாய் வீட்டில் பிரியாணி உண்டா என்றே அடி நாசி

தினந்தோறும் மோப்பம் பிடிக்கும் 

பிரியாணியில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு குஸ்காவில் கலந்து போனேன் அடி

எவ்வாறு பீசோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்

என் இரவினை ஏப்பத்தால் மொழி பெயர்த்தேன்

மூடி மூடி வைத்தாலும் பிரியாணி அண்டா

அடுத்த தெருவரை வாசம் வீசும் "சங்கிகள்" சாட்சி

ஓடி ஓடிப் போகாதே சைவக்காரா

நாம் உயிரோடு வாழ்வதற்கு பிரியாணி சாட்சி


கீதா மோகன்

No comments: