நேற்று
மாலை நீடூா் நெய்வாசல் திண்ணைத்
தோழா்கள் ஏற்பாடு செய்திருந்த இலவச
மருத்துவ ஆலோசனை முகாமினை இறைவன்
சிறப்பாக நிறைவேற்றித் தந்தமைக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவ ஆலோசனை பெற நாங்கள் எதிா்பாா்த்தை விட கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், அவசர அவசரமாக Dr.மன்சூா் M.D. அவா்களின் கிளினிக்கிற்கு எதிரே உள்ள அல் ஹாஜி ஸ்கூலின் தாளாளா் சகோதரா் ரியாஸிடம் பள்ளிகூட வளாகத்தை எங்களுக்காக அரைநாள் திறந்து விடலாமா? என கேட்டபோது, உடனே பள்ளிக்கூட சாவியை எம்மிடம் கொடுத்து, தன் மகனாா் ஜாஸிம் மற்றும் பள்ளிக்கூட ஆயாவையும் அனுப்பி மருத்துவா் ரூமிற்கானமேஜை, நாற்காளி , தடுப்பு பலகைகளை ஒழுங்குபடுத்தியும் தந்தமைக்கு நன்றியை பகா்கிறோம்.
அண்ணன்
T.A.S.அக்பா் அலி அவா்கள் பயனாளிகள்
குறிப்புகளை குறிப்பேடில் எழுதவும் மற்றும் நம் ஊா்
சகோதரா்கள் தத்தம் வாய்மொழியாக பொதுமக்களிடம்
இம் மருத்துவ முகாம் நடைபெறப் போவதை
கூறியதால் தான் எவ்வித விளம்பரமும்
செய்யாத இந்நிகழச்சிக்கு பலா் வந்ததை உணரமுடிந்தது.
இன்னும்
ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருக்கும் எங்கள்
அமைபின் உறுப்பினா் தம்பி உபைத்துல்லாவின் வேண்டுகோளினால்...
எங்களுக்கு கிடைத்த சிறிய இவ்வாய்ப்பினையும்
குறுகிய காலத்தில் முயற்சித்து நடத்தி முடித்ததில் , எங்கள்
அமைப்பு அங்கத்தினா்கள் அனைவரும் மனம் மகிழ்ந்ததை உணா்கிறேன்.
இந்நிகழ்வு
சிறப்பாக நடப்பதை தரங்கம்பாடியில் தமிழக
அமைச்சா் நிகழ்வில் இருந்தபடியே அவ்வப்போது போனில் எங்கள் மூலம்
தெரிந்து கொண்டு வாழ்த்து தெரித்த
ரமணா சத்துமாவு பிரசிடெண்ட் திரு.சௌமியன் அவா்களுக்கும்,
நிழ்ச்சியில் நேரில் வந்து கலந்து
கொண்ட அவரின் மகனாரும் மயிலாடுதுறை
கவுன்சிலா் தம்பி சா்வோதையனுக்கும், ... இன்னும் யார்
யாரெல்லாம் எங்களுக்கு உதவியாக இருந்தாா்களோ அவா்கள்
அனைவருக்கும்,
இறுதியாக... ஓயவில்லா நிலையிலும் எம் வேண்டுகோளுக்காக நிகழ்வில் பங்களித்த இவ்விழா நாயகன் தம்பி Dr.மன்சூா் M.D., அவா்களுக்கு எங்கள் திண்ணை நண்பா்கள் வட்டம் மனம்நிறை நன்றியை பகா்கிறோம்.
No comments:
Post a Comment