Thursday, March 31, 2022

நூல் அறிமுகம்-8 | விடுதல்களும் தேடல்களும் | நிஷா மன்சூர்


எனது "விடுதல்களும் தேடல்களும்" கட்டுரை நூல் குறித்த மதிப்புரையை அன்புக்குரிய அஜீஸ் வாஹிதி மெளலானா வீடியோவாக வெளியிட்டுள்ளார். 
ஒவ்வொரு கட்டுரைக்குமாக விளக்கம் கொடுத்து விவரிக்க முயன்றிருக்கிறார்,
நூலின் முகப்புக்கு விடுதல்களைத் தேடும் ஞானப்பயணமாக அவர் கொடுத்திருக்கும் மதிப்பீடு,கட்டுரைகளின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. மெளலானாவுக்கு என் நன்றி 💙
நிஷா மன்சூர்   · 
#விடுதல்களும்_தேடல்களும் 
--------////////--------
நிஷா மன்சூர் அவர்களின் 'விடுதல்களும் தேடல்களும்' 12 கட்டுரைகளின் நூல் பொதியை வாசிக்க நேர்ந்தது. அதன் மதிப்பீட்டை இந்த இணைப்பில் குறைந்த அளவிற்கே கூறியிருக்கின்றேன். 
https://youtu.be/c54TyNXGByM
சொல்வதற்கு இன்னும் இருக்கின்றது..

@ நூலை கம்பம் #அம்பா_நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹ் அவர்களின் திருச்சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார்
@ இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், கலாச்சாரங்கள் சார்ந்த அனைத்தும் நீர்த்துப் போக 'வஹ்ஹாபிய இயக்கங்களே' முக்கியக் காரணிகள் என்று கடுமையாகச் சாடுகிறார்
@ கல்வத் நாயகம், ஜல்வத் நாயகம், குணங்குடி மஸ்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹிம் ஆகியோர் பற்றிய நிறைய புரிதல்களை மிக இலகுவாக நூல் முழுவதும் ஆங்காங்கே தூவுகிறார்
@ மேற்கோள் காட்டியிருக்கும் அத்தனை கவிதைகளும் பால்வெளியில் மிதக்கும் கோள்களின் பிரம்மாண்டமாய் விரிகின்றது
@ குறையாக நான் காண்பது பிராகிருத மொழி பெயர்ப்பான கவிதைத் தொகுப்பை மதிப்புரைக்கு எடுத்தது. அக் கவிதைத் தொகுப்பு முழுக்க (பெரும்பாலும்) களவுக்காதல், களவுக்காதலுக்கு உதவும் சக தோழியர்.... இப்படியாகச் செல்கிறது. தொகுப்பில் ஒரு சில நலவுகள் இருந்தாலும் காஹா சத்தசஈ யில் எதிர்மறையான தரவுகளே அதிகம். நூலின் கருத்தாக்கத்தில் நிஷா மன்சூர் அவர்களுக்கு உடன்பாடு இருக்காது. இலக்கண, இலக்கிய முறைமை குறித்தே பேசுகிறார். எனினும் இந்த நூலுக்கு மதிப்புரையை  கொடுத்திருக்க வேண்டாம் அல்லது அந்த ஆக்கத்தை இத்தொகுப்பில் இணைத்திருக்க வேண்டாமென்பது என் அனுமானம். 
@ கடைசியாக பேரன்பின் பெட்டகம் Lafees Shaheed ன் மதிப்புரையும் உண்டு.
பேரன்புடன்.. PM Wahithiyar

No comments: