என்
கடிதப் பூக்கள்
காகிதப் பூக்கள் அல்ல
காலத்தால் அழியாத
காதலெனும் காவியத்தின்
கவின்மிகு கல்வெட்டுகள்
நீ
முழுமதியாய் ஒளிரும்போது
தொட்டுவிடத் துடிக்கும்
என் கரங்கள்
நீ
இறங்கி வந்தபோது
உன் அருமை
எனக்கு புரியவில்லை
இன்றோ
உனக்கும் எனக்கும்
ஒரு காத தூரம்
இருப்பினும்
பெருமையாய்
சொல்லிக் கொள்கிறேன்
அந்த வானத்து நிலா எனக்கு
பூர்வீக சொந்தம் என்று ...
No comments:
Post a Comment