Friday, December 30, 2016

கொஞ்சம் யோசித்தேன் ...

முயன்றிடு
வெற்றி கொள்வாய் ...
பயின்றிடு
அறிவை பெருக்குவாய் ...
பயிரிடு
அறுவடை செய்வாய் ...
உழைத்திடு
உயர்வை அடைவாய் ...
துணிந்திடு
அச்சம் தவிர்ப்பாய் ...
பணிந்திடு

சாந்தம் பெறுவாய் ...
பேசிடு
வார்த்தைகளை உருவாக்குவாய் ...
வாசித்திடு
சிந்தனை பெறுவாய் ...
அளவோடுண்ணு
ஆரோக்கியம் பெறுவாய் ...
தர்மமிடு
ஏழையோடு சிரிப்பாய் ...
எழுந்திடு
சுறுசுறுப்பு அடைவாய் ...
எழுதிடு
எண்ணங்களை விரிப்பாய் ...
உழுதிடு
விவசாயம் காண்பாய் ...
தொழுதிடு
நிம்மதி பெறுவாய் ...
அப்துல் கபூர்

Mohamed Gaffoor

No comments: