Vavar F Habibullah
படைப்பாளிக்கு பார்வையாளன் தேவைதலைவனுக்கு தொண்டன் தேவை
பகவானுக்கு பக்தன் தேவை
நடிகனுக்கு ரசிகன் தேவை
முதலாளிக்கு தொழிலாளி தேவை
ஏமாற்ற ஏமாளி தேவை
நல்லவனை கண்டறிய
தீயவன் தேவை.
வரட்சிக்கு மழை தேவை
வறுமைக்கு பணம் தேவை
மனிதன் வாழ மனம் தேவை
உடல் வாழ உயிர் தேவை
ஈன்று புறந்தர தாய் தேவை
தேவைகள் நிறைய தேடல் தேவை
தேவைகள் நிறைந்தால் அமைதி தேவை
முகவுரைக்கு முடிவுரை தேவை
பிறப்புக்கு மரணம் தேவை.
Needs are not needed when
The life needs the end.
Dr. Vavar F Habibullah
No comments:
Post a Comment