Tuesday, October 25, 2016

திருமறையின் தோற்றுவாய்” -ஓர் அறிமுகம்..../ ஏம்பல் தஜம்முல் முகம்மது




”திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கின்ற திருக் குர்’ஆனின் முதல் அத்தியாயமான ”அல்-ஃபாத்திஹா சூரா”வை முற்றிலும் தழுவி எழுதப்பட்ட ஆக்கம் இது:-
Yembal Thajammul Mohammad---------------------------------------------------------------------------
வெளிச்ச வாசல்….!
===============================================
1.அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...



2.எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இலங்கும் உலகம் பற்பலவாம்
வல்லான் அவனே படைப்பவனாம்
வாழச் செய்திடும் ரட்சகனாம்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாளைய தீர்ப்பின் அதிபதியாம்!

3.அதிபதி உனையே வணங்குகிறோம்
அடிமைகள்,உதவியும் தேடுகிறோம்
எதுநேர் வழியோ அதில் செலுத்து...
இன்னருள் பெற்றோர் வழியதுவே!

4.நீசினந் தோரின் வழிவேண்டாம்
நெறிகெட் டோரின் வழிவேண்டாம்
மாசில் லாஉன் அருள்பொழியும்
மார்க்கப் படியே எமைநடத்து….
(அளவே இல்லா அருளாளன்...)

5.வேதம் எதிலும் இல்லாத
வெளிச்ச வாசல் ஃபாத்திஹா
போதம் குர்-ஆன் சாரமிது!
புரிந்தோர் உணரும் ஞானமிது!!
ஆமீன்,ஆமீன் அவ்வாறே
ஆகுக,ஆகுக,ஆகுகவே!
---ஏம்பல் தஜம்முல் முஹம்மது


Yembal Thajammul Mohammad

No comments: