Tuesday, December 27, 2016

வாழ்த்துக்களால் மனங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதே மனிதச் செயல்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து தர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்த தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த நாடுகளெல்லாம் முஸ்லிம் நாடுகளில்லை.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் உண்டு. அமெரிக்காவே இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தவில்லை.
இங்கேயும் எங்கேயும் நாம் எல்லோரோடும் இணங்கி வாழ வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.
எல்லா நாடுகளும் இஸ்ரேலைப்போல வெறிகொண்டலைந்தால் உலகம் அழிந்தே போகும்.

வன்முறைகளற்ற
யுத்தங்களில்லாத
சமாதானமான
ஒரு உலகத்தை உருவாக்கும் பொறுப்பு
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
பகையை வளர்க்காமலிருந்தாலே போதும்.
இணக்கம் தானாக வளரும்.
யாருடைய நெஞ்சிலும் வெறுப்பின் நெருப்பை மூட்டி விடுவது முஸ்லிம்களின் செயலாக இருக்க முடியாது.
பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்பது மக்கள் துன்பங்களக மறந்து சந்தோஷமாக இருக்கும் தருணங்கள்தான்.
இந்த நேரங்களில்
வாழ்த்துக்களால் அவர்களின் மனங்களுக்கு
மகிழ்ச்சியூட்டுவதே மனிதச் செயல்.

Abu Haashima

No comments: