பயமே மனிதனின் ஆதி உணர்வு,
எல்லா நவீன முன்னேற்றங்களுக்கும் பயமே தூண்டுகோல்..!!
பசியிலிருந்து விடுதலை பெற்றாலும்
பயத்திலிருந்து விடுதலை பெறமுடியவில்லை..!!
பாசம் பயத்தாலும் வரும்,
பயம் பாசத்தாலும் வரும்...!!
பயத்தால் வரும் பக்தியும்
பக்தியால் வரும் பயமும் நிலையானவையல்ல..!!
கற்பனை நோய்களுக்கு மருந்தில்லை; கற்பனை பயங்களுக்குத் தீர்வில்லை..!!
பயங்களே நம்பிக்கைகளை விதைக்கின்றன,
பயங்களே வெற்றிக்கான வரையறைகளை உருவாக்குகின்றன..!!
பேய்கள் குறித்த பயங்கள் கற்பனை மிகுதியால் உருவாகின்றன,
சூதுள்ள மனிதர் குறித்த பயங்கள் அனுபவ வலிகளாலும் உருவாகின்றன..!!
-நிஷா மன்சூர் Nisha Mansur



No comments:
Post a Comment