Showing posts with label கருவறை. Show all posts
Showing posts with label கருவறை. Show all posts
Saturday, March 1, 2014
”பருவம்” (பாடலுடன் கவிதை)
முந்தியப் பருவம் கருவறை வளர்ச்சி
**** முதன்முதற் அங்குதான் சுழற்சி
தந்தையும் தாயும் இறையவ னருளால்
****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
*******வளமையும் இளமையும் தேயும்!
இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
வளமையில் இறையை மறந்ததை யோசி
****வறுமையின் புயலதும் வீசி
உளமதில் பருவ மாற்றமும் வந்து
*****உறுதியும் குலைந்துநீ நொந்து
களமதில் மாறும் காட்சியாய் உருவம்
******கரைந்ததும் காலமெனும் பருவம்!
Sunday, May 27, 2012
இருட்டைக் கண்டாலே பயம் !
இருட்டைக் கண்டாலே பயம். மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது. இரவு நேர இருட்டில் திருடன் வந்துவிடுவான் என்ற அச்சம் காலம் மாறிப்போச்சு பகலிலேயே திருடன் திருட வரும் காலம். அக்காலத்தில் சொல்வோம் 'பகல் கொல்லைக்காரன்' என்று . அவன் நம்மை ஏமாற்றி பிழைப்பதால் அப் பெயர் வந்திருக்கலாம். இது இப்பொழுது சர்வ சாதாரண அன்றாடம் நிகழும் நிகழ்வு. நமக்கு தெரிந்தாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. தெரிந்து சொன்னால் வேலை நடக்காது அல்லது ஆபத்து நம்மை வந்து அடையும் என்ற மனப்போக்கு. ஆள் பலம் ,அரசியல் பக்க பலம்,பண பலம் இருப்பவர்களுக்கே இந்த பயம் இருந்தாலும் அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் 'பந்தா' பண்ணுவார்கள்
Subscribe to:
Posts (Atom)

