Tuesday, April 16, 2013

பிரபலங்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்


'தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். கைபேசி எண் : +91 9944345233 dindiguldhanabalan@yahoo.com

Occupation
ISO 9000 Consultant & Business- ' - திண்டுக்கல் தனபாலன் 
-----------------------------------------------------------------

வலைத்தளம் வலைப்பூ நடத்துவோர், படித்து அறிவைப் பெறுவோர் பேரன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன்  அவர்களை அறியாதோர் யாருமில்லை.
அவர் நடத்தும் வலைப்பூ அவர் ஊரோடு அவர் பெயரையும் இணைத்து இருக்கிறது .
திண்டுக்கல்  ஹல்வாவைப்  போன்று  மிகவும் ருசிதான் .
'திண்டுக்கல் தனபாலன்' இதுதான் அவரது வலைப்பூ திண்டுக்கல் தனபாலன்
பல உண்மையான கருத்துக்கள்..,சிறப்பான தொகுப்புகள் .பலருக்கும் உதவும் என்பதால் பகிர்கிறார் ஆனால் ஒன்றையும் தூக்கிச் செல்லாதவாறு பாதுகாப்பாய் வைத்துள்ளார் காப்பி குடிக்க தருவார் காப்பி மற்றும் பேஸ்ட் பண்ண முடியாது .
இறைவன் அவருக்கு கொடுத்த அறிவை மக்களுக்கு வழங்குகின்றார். 'உங்களில் உயர்ந்தோர் தாம் பெற்ற அறிவை மற்றவருக்கு கற்பிப்பவர் ஆவார்' என்பது நபிமொழி
  'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
 ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13
 உங்களில் உயர்ந்தவர் யார் என கேட்கும் போது 'பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றிவைத்தவர் உங்களில் உயர்ந்தவர்' என நபிகள் நாயகம் நவின்றார்கள்.
 புகழுக்காகவும் ,பொருள் நாடியும் எழுதுவோர் இருந்தும் மக்கள் பயனடையவேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் நம் முன்னோர்கள் .அது மட்டுமல்ல அறிவை பகிர்ந்துக் கொள்ள முடியாமல் ஆன்றோர்களால் இருக்க முடியாது.அறிவு உங்களுடன் அடைந்துக் கிடக்கும்போது ஒரு பயனுமில்லை. அது வெளியே வந்துவிட்டால் பொதுவுடமையாகி விடுகின்றது

 ---------------------------------------------------
(sury said...

    எனது பதிவு
    ரசித்துப் படித்த வலைப்பதிவுகளுக்கு வந்து
    தஞ்சை டிகிரி காபி எப்படி போடுவது என்று கேட்டவருக்கு
    எங்கள் வீட்டுக்கு வாருங்கள், காபி சாப்பிட வாருங்கள்
    என்று அழைப்பு விடுக்க வந்தால் !? இங்கே திடுக்கிட்டேன்.

    உங்கள் பதிவிலிருந்து பல பதிவுகள் திருட்டுபோய்விட்டன‌
    என வருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
    ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

    முல்லா நசிருதீன் கதைகளில் ஒன்று:
    அவர் வீட்டில்
    அடிக்கடி திருட்டு போய்க்கொண்டே இருந்தது.
    திருடனைக் கண்டிப்பாக பிடித்தே ஆகிவிடவேண்டும் என்று
    ஒரு நாள்
    ஒளிந்து கொண்டு திருடன் வரும் நேரம் காத்திருந்தார்.
    திருடனும் வந்தான்.
    திருடினான்.
    திரும்பிச்சென்றான். முல்லாவும் அவன் பின்னாலேயே சென்றார்.
    திருடன் தன் வீடு சென்று
    திருடிய பொருட்கள் யாவையும் அழகாக அடுக்கி வைத்தான்.
    திடீரென ஒரு இருமல் சத்தம் !
    திரும்பிப் பார்த்தான்.
    திடுக்கிட்டான். முதியவர் ஒருவர்! அவனுக்குத்தெரியவில்லை
    திருடிய வீட்டின் சொந்தக்காரர் இவர் தான் என.

    யார் நீ ? இங்கு ஏன் வந்தாய் ? எனக் கேட்டான்.
    யார் நீ என நான் அல்லவா கேட்கவேண்டும் ? என்றார் முல்லா நசிருதீன்.

    திருடனுக்கு ஒரே குழப்பம்.
    வெளியோ போ !என்றான்.
    வெளியோ போ ! என்றார் அவர்.
    இது என் வீடு என்றான் அவன்.
    இதில் இருக்குமெல்லாம் என்னுடையவை எனும்போது
    இது உன் வீடும் ஆகுமோ என்றார் முல்லா.

    திருடனுக்கு தேள் கொட்டியது போல் வியர்த்தது.
    திகைத்தான் செய்வதறியாது திணறினான். வார்த்தை வரவில்லை.

    ஒன்று செய். உன்னை மன்னித்து விடுகிறேன் என்றார் முல்லா.
    இன்று முதல் நீ என் வீட்டுக்குச் சென்று விடு. நான் இங்கு இருப்பேனினி.
    நன்றாகப் போயிற்று. நானும் வேறு வீட்டுக்குச் செல்லலா மென்று தான்   இருந்தேன். வாடகை யின்றி என் பொருட்களனைத்துமிங்கே கொணர்ந்திட்டாய்.
    நன்றி.
    வந்தனம் என்றார்.
    வாழ்க வளமுடன் எனவும் ஆசி வழங்கினார்.

    சுப்பு தாத்தா.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com
------------------------------
 எம்.ரிஷான் ஷெரீப்  அவர்களிடம் முன்பே அனுமதி பெற்றுள்ளேன் .
நான் படித்ததில் சில . நீங்களும் படியுங்கள்.
தலைப்பு நான் கொடுத்தது .
அதில் உள்ள தலைப்பு
பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

http://rishanshareef.blogspot.in/2008/07/blog-post.html
------------------------------------------------------------
இதனையும் படியுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!


எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாத...
Source http://nidurseasons.blogspot.in/

  Please click here to read No Copy right in Islam  http://seasonsali.blogspot.in/
 ---------------------------------------------------------------------------------------

 திண்டுக்கல் தனபாலன் அருமையான கருத்துரைகள் அனைத்து  வலைத்தளம் வலைப்பூக்கலில் நிறைந்து உற்சாகமும் உத்வேகமும் தருவதனைக் காணலாம் .

 anbudanseasons அன்புடன் சீசன்ஸ் என்ற வலைப்பூவை ஒரே ஒருவர் பின்  தொடர்கிறார் மற்றும் அதில் வரும் கட்டுரைகளுக்கும் கருத்துரை தருகிறார் . அந்த பெரியவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
திண்டுக்கல் தனபாலன் வந்து ஏமாறக் கூடாது என்பதர்க்காகவே அதில் கட்டுரை வரும்போல் தெரிகிறது .இருவருக்கும் பெரிய மனது

 அவரைப் பற்றி அதிகமாக எழுதலாம் ஆனால் அதன் குறிப்புகளை அவரது வலைத்தளத்தில் தொடமுடியவில்லை .

பெற்ற விருதுகள் பல .அதனையும் பாதுகாப்பாக வைத்துள்ளார் .யாரும் எடுத்துச் செல்ல முடியாது பார்த்து ,மகிழ்ந்து வாழ்த்தி வரலாம் .
பேரன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தொடர்ந்து கருத்துரை வழங்கி வாழ்த்தி வருவது பலரையும்  உற்சாகப் படுத்துகின்றது .
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தொண்டு வளர சேவைகள் மிளிர அவரும் நலம்பெற்று வாழ வாழ்த்துவோம் ,

இதனை சொடுக்கி படியுங்கள் பாராட்டுங்க! பாராடப்படுவீங்க! 
அன்புடன்
முகம்மது அலி ஜின்னா
 

5 comments:

sulthan mydeen said...

GOOD

திண்டுக்கல் தனபாலன் said...

மிகச் சாதாரண மனிதன் தான்... பிரபலம் எல்லாம் இல்லை ஐயா... தங்களின் அன்பிற்கு... நன்றி என்று சொல்வதா...? ஒன்றும் புரியவில்லை... தங்களின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்...

காப்பி மற்றும் பேஸ்ட் செய்யலாம்... நிறைய வழிகள் உள்ளன... அதை தடுத்து உள்ளேன்... அவ்வளவே...

நமது நண்பர்களின் சில பதிவுகள் :

1. ப்ளாக்கர்-உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை | கற்போம் - http://www.karpom.com/2012/04/follow-copied-posts-of-your-blog.html

2. ப்ளாக்கர்--கணணிக்கல்லூரி ®©: பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Methord) - http://www.tamilcc.com/2012/08/jquery-methord.html

இதையும் மீறி காப்பி மற்றும் பேஸ்ட் செய்யலாம்... திருடர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு...

தங்களின் ஆசிக்கு மிக்க மிக்க நன்றி...

mohamedali jinnah said...

தமிழ் கணினி உலகில் உண்மையில் மிகவும் அறிமுகமானவர்தான் நீங்கள் .
அனுமதி பெற்றுதான் அடுத்தவர் பொருளை பெற வேண்டும் அத்துடன் (Source and Link)பெற்ற இடம் தெரிவிக்க வேண்டும் .அதை நான் செயல்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்துவேன் .
மற்றொரு வரியையும் நீங்கள் அறிந்து உங்கள் உயர்வை அறியலாம்

anbudanseasons அன்புடன் சீசன்ஸ் என்ற வலைப்பூவை ஒரே ஒருவர் பின் தொடர்கிறார் மற்றும் அதில் வரும் கட்டுரைகளுக்கும் கருத்துரை தருகிறார் . அந்த பெரியவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
திண்டுக்கல் தனபாலன் வந்து ஏமாறக் கூடாது என்பதர்க்காகவே அதில் கட்டுரை வரும்போல் தெரிகிறது .இருவருக்கும் பெரிய மனது

Krishna moorthy said...

அவர் எப்போதும் உற்சாகமானவர் மட்டுமல்ல உடனே நம்மையும் சந்தோசப்படுத்துபவர்.

mohamedali jinnah said...

@Krishna moorthy தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி . உங்கள் கருத்து முற்றிலும் உண்மை

LinkWithin

Related Posts with Thumbnails