Wednesday, September 19, 2012

நமக்குள் பல பாதுகாப்புகள்.மனதுக்கும் உடல் நலத்திற்கும் தொடர்பு உள்ளது .நல்ல சிந்தனை, உயர்வான எண்ணங்கள்,  தாழ்வு மனப்பான்மை அற்ற  மனநிலை ஆரோக்யமான உடல் நலம் தர உதவும். சிந்தனைச் சிதறல், முறையற்ற வாழ்க்கை ,குறிக்கோள் அற்ற வாழ்வு, தன் மீதே நம்பிக்கையற்ற குணம் , எதிலும் தவறாகவே சித்திப்பது ,பய உணர்வு  இவைகள் உடல் நலத்தைப் பாதிக்கும் .

 அறிவின் வளர்ச்சி அபிவிருத்தி செய்ய அது நாற்பது வயதைக் கடக்கும் போது பக்குவம் அடைகின்றது ,அது அறிவின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது . மனித மூளையின் செல்கள்  அறிவைத் தூண்ட  பன்மடங்காக பெருகுகின்றது. அதாலதான் நாற்பது வயதைத் தாண்டியோர் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்டவர்களாக உள்ளனர்(மருத்துவர், வழக்கறிஞர்கள் கலைஞர்கள்  மற்றும் அறிவு ஜீவிகள் ) மனித உடல் தனித் தன்மையுடன் இருப்பதால்தான் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றது. இவைகள் நகராத்  தன்மையைக் கொண்ட உணர்வற்ற ஜடப் பொருளுக்கு கிடையாது.(நாற்காலி உடைந்தால் நாம்தான் சரி செய்ய வேண்டும்) காயம் ஏற்படும்போது தோலில் உரசல் ஏற்படிருந்தால் உடல் தோலின் வளர்ச்சி ஏற்பட்டு சரி செய்து விடுகின்றது . மாரடைப்பு ஏற்பட மருத்துவர் வலி நீங்க பெதடின் ஊசி போட்டு வலியை குறைக்கின்றார். இரத்தத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகின்றார். ஓய்வு எடுக்க சொல்கின்றார் . அதில் முக்கியமான ஒன்று  இருதயம் தன்னைத் தானே சரி செய்துக் கொள்வது இறைவனது ஆற்றல்.


 இறைவன் நம் உடம்பில் இயற்கையாகவே நம்மை பாதுகாக்க பல ஆயத்தங்களை செய்துள்ளான். அதன் மகிமையை நாம் அறிந்துக் கொளவதில்லை. ஒரு சொட்டு கண்ணீர் பல கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. கண்களில் தூசி விழாமல் அனிச்சை செயலாக நம்மை அறியாமலேயே  நம் கண்கள் மூடிக் கொள்கின்றன. அதுவும் மீறி கண்களில் தூசி விழ கண்ணீர் சுரந்து பாதுகாப்பு கொடுக்கின்றது. கண்களின் இமைகளை அடிக்கடி மூடி திறப்பது நல்லது. கணினியில் அதிக நேரம் ஒரே இடத்தை நோக்கி அமரும் பொது கண்ணுக்கு ஓய்வு தருவதில்லை .அதனால் கண்ணீர் சுரப்பது குறைகின்றது. அதனால் சிறிது நேரம் இடைவெளி  கொடுத்து மறு பக்கம்  திரும்பி இமைகளை திறந்து மூடுவதால் கண்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.
மூக்கின் முடிகள் தூசி நம் இருதயத்திற்கு செல்லாமல் தடை செய்கின்றது. அதுவும் மீறினால் மூக்கில் ஒரு இறுக்கம் தருவதற்கு கூழ் உண்டாகி தூசியை தடை செய்கின்றது  இதனையும் மீறும்போது இருமல் வந்து நம் இதயத்திற்கு ஒரு பாதுகாப்பு தருகின்றது. ஒரு சாதாரன இருமல் வந்தாலும் நாம் மருந்து எடுத்துக் கொள்கின்றோம் . தொடர் இருமல் வரும்போதுதான் மருத்துவரை நாட வேண்டும்.

 மணல் ஏற்றி செல்லும் லாரியில் மணல் மீது போர்த்தப் பட்டிருக்கும் துணி மீது சிலர் நிம்மதியாக தூங்குவதனை நாம் பார்த்திருக்கலாம். அவர் வேலை செய்த களைப்பினால் அயர்ந்து தூங்குகின்றார். நாம் ஒரு உடல் உழைப்புமில்லாமல் தூக்கம்  வராமல் தூக்க மருந்து வாங்கி விழுங்குகின்றோம். பின்பு அதற்கு அடிமையாகி விடுகின்றோம். தூக்கம் வராமல் வருந்துவது மிகவும் பாதிக்கும். ஒரு மனிதனால் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியாது. அவன் இடை இடையே பூனைத் தூங்குவது போல் தூங்கி இருப்பது அவர் அறிந்திருக்கமாட்டார். மரணத்தை விட மரண பயம் மிகவும் கொடியது.
இறை நம்பிக்கையும் ஆத்ம திருப்தியும் ,உடல் உழைப்பும் அவசியம் தேவை . உள்ளம் கெட்டால் அனைத்தும் கெடும்.
 சிறுவனாக இருந்தபோது பள்ளிக் கூடத்தில் எழுதியிருந்ததை மாற்றி 'தேகாத்ணாவி தைத்லகா' என்று மனனம் செய்தது நினைவுக்கு வருகின்றது. அது இதுதான் - காலத்தை வீணாக்காதே  உடல் நலம் கெடும்போது மருந்துகள் தேவைப்படுகின்றது . வியாதியை குணப்படுத்த மருந்துகள் உதவுகின்றன. மருந்து வழி சிகிச்சை பெற மருத்துவரை அனுகின்றோம். நாம் அனைவரும் ஆரோக்கியமாக மற்றும் நல்வாழ்க்கை வாழவே  விரும்புகின்றோம். ஆனால் அதற்காக நாம் செலவு செய்வதைவிட  மற்ற கேளிக்கைகளுக்கும் சுகபோக வாழ்விற்கும் செலவு செய்வது அதிகமாக இருக்கின்றது. ஆண்கள் பணம் கிடைத்தால் கார் வாங்கவும் இன்னபிற ஆடம்பர வாழ்வினை நாடுகின்றார்கள். அதனால் அவர்களது உடல் உழைப்பு குறைந்து  உடல்நிலை பாதிக்கப்படுகின்றது . அதனால் வியாதியை விலை கொடுத்து வாங்குவதோடு ஈட்டும் பணம் மருத்துவத்திற்கே செலவாவதுடம் உடல்நலம் பாதிக்கப்பட்டதனால் வேலை  செய்வதில்  பாதகம்    ஏற்பட்டு    பணத்திற்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.பணம் இல்லாமையால் மருந்துவரிடம் செல்வதும் குறைகின்றது. 

  உடல் நன்றாக இருக்குபோது உடல்நலத்தின் மீது அக்கறை எடுப்பதில்லை. ஏதாவது ஓர் இடத்தில வலி அல்லது நோவு ஏற்படும்போது மருந்துக் கடையில் நாமே மருந்து வாங்கி உட்கொள்கின்றோம். வலி ஒரு வியாதி அல்ல. ஒரு வியாதியின் அறிகுறியே வலி வருவது. தலை வலித்தால் கண் கோளாறு,அலர்ஜி  மற்றும்  பல காரணங்களுக்காக அது வரலாம் .  இங்கு இருக்கும் மருத்துவர்களும் எடுத்ததெற்கெல்லாம் கிருமி கொள்ளும் மருந்து, மாத்திரைகள்(ஆன்டி பயோடிக்) கொடுத்து விடுகின்றார்கள் . தேவைக்கு கொடுக்கப்பட்டாலும் அதனை சிறிது எடுத்துக் கொண்டு உடலில் சிறிது நலம் உண்டாவது தெரிந்தவுடன் மருத்துவர் சொன்னபடி முழுமையாக சாப்பிடாமல் இருந்துவிடுவதால் அந்த கிருமிகள் உடலில் தங்கி இருந்து திரும்பவும் வேகமாக செயல்பட ஆரம்பிக்கின்றது . எப்பொழுதும்  அரை குறையாக செயல்படுவது நன்மை பயக்காது.அதனால் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது. தேவையில்லாமல்  மருத்துவரையும் அடிக்கடி மாற்றுகின்றோம் .  இது போன்று வளர்ந்த மேலை நாடுகளில் நடப்பதில்லை.  

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails