எங்கள் அன்புக்குரிய இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களை எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கின்றோம் அவர் மீது இருக்கும் மீது உள்ள பாசமும் , நேசமும் உலகம் உள்ள அளவும் மாறாது குறையாது அது கூடிக் கொண்டே இருக்கும். "ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்" கொடுத்தாலும் இஸ்லாம் போதித்த ஓர் இறைக் கொள்கையையும் குர்ஆன் போதித்த கொள்கைகளையும், இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் மீறி நடக்க மாட்டோம் .
"ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன்" என்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)
நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)
நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)
No comments:
Post a Comment