Wednesday, September 12, 2012

குத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா?



وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ
 

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:22Source: http://www.tamililquran.com/ 
'குத்பா அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கு  எந்த ஹதீஸ்களிலும்  ஆதாரம் இருப்பதாகத்  தெரியவில்லை.
நபிகள் நாயகம்  ஸல் அவர்கள்
குத்பாவை அரபி மொழியில்தான் உரையாற்றினார்கள்.

அல்லாஹ் (இறைவன் ) மக்களுக்கு வழிகாட்டியாக ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம்   நபிமார்களை அனுப்பி
யுள்ளான்.  ஆனால் குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளான். அதனால் ஒவ்வொரு  மொழி பேசுபவர்களுக்கும் நபி வந்திருப்பது உறுதி . தமிழ் மக்களுக்கும் ஒரு நபியை இறைவன் அனுப்பி இருப்பான் என்றும் நாம் நம்பலாம் . நமக்கு அவர் யார் என்பது தெரியாமல் இருக்கலாம் . அந்தந்த பகுதியில் அனுப்பப் பட்ட நபிகள் அந்த மொழியிலேயே பேசி மக்களை நல்வழிப் படுத்தினார்கள் . இறுதியாக அனுப்பப் பட்ட இறைத்தூதர்தான் 
எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்)  அவர்கள்.


ஏதாவது ஒரு மொழியில்தான் உலகளாவிய
இறைத்தூதரை அனுப்ப முடியும் என்ற ஒரே
அடிப்படையில் தான் முகம்மது நபிக்குத் தெரிந்த
அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது
 
அரபு மொழி நபியின் தாய்மொழி மற்றும் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் மொழி . அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் இருந்தமையால் குர்ஆனும் அரபிய மொழியில் இறக்கப் பட்டது.  நபிகள் நாயகம் .அரபிய நாடு அல்லாத மற்ற நாட்டு மன்னர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் அரபி மொழியிலேயே கடிதம் அனுப்பினார்கள் . அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து தனது கடிதத்தின் பொருளை அறிந்துக் கொள்வார்கள் என்பதை நாயகம் அறிவார்கள்.

ளுகர் தொழுகை நான்கு 
ரக்அத்தாக இருக்க ஜும்மா தொழுகை இரண்டு   ரக்அத்தாக உள்ளது.ஆனால் குத்பாவின் சிறப்பு அந்த விடுபட்ட இரண்டு க்அத்திற்கு தொழுகைக்கு கொடுக்கப்படும் சிறப்பினைக் கொண்டது. அதனால்தான் குத்பா நடைபெறும் பொது நாம் அவசியம் கலந்து கொள்வதும் பேசாமல் அமைதி காப்பதும் அவசியமாகின்றது.   
அதற்கு
குத்பா ஒரு மார்க்க விளக்கமாக, அல்லாஹ்வை துதி செய்வதாகவும் மற்றும் இறைவனின் அருள் நாடி வேண்டப்படுவதாக அமைதல் வேண்டும் . குதுபா ஒரு சாதாரண மேடைப் பேச்சு போன்று ஒரு காலும் அமைந்து  விடக் கூடாது. குத்பாவிற்கென்று சில விதி முறைகள் கையாளப் பட வேண்டிய அவசியம் உள்ளது . அதில் ஒரு துண்டாடப் படாத இறைவசனமும் அவசியம் சேர்க்கப் படவேண்டும். இதில் எந்த வகையிலும் தவறுகள் ந்து விடாமல் இருப்பதற்குத் தான் முதலிலேயே தயாரிக்கப்பட்டதனை  வைத்து குதுபா உரை நிகழ்த்தும் வக்கம் கடைப் பிடிக்கப்படுகின்றது. பல நாடுகளில் (அரேபிய ,மலேசிய மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் அரசே குத்பா உரையை தயார் செய்து  கொடுத்து விடுகின்றது.)

 குதுபா  அரபி மொழியில்
தான் இருக்க வேண்டுமா?

நாயகம்  அவர்களுக்கு தெரிந்த 
அரபி மொழியில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அதனால் அதனை நாமும் பின் பற்றுவது நாயக வழியாக(சுன்னத்தாக) அமையும். அதனால் முதலில் அரபியில் உரை நிகழ்த்தி பின்பு அதனை மொழியாக்கம் செய்து சொல்வதும் பயன் தரக் கூடியதாக அமையும். மக்களுக்கு புரிய வைப்பதும் மற்றும் அறிய வைத்து அதன் வழி வாழ உரை நிகழ்த்தப் படும் போது அதனால் சிறந்த,உயர்ந்த விளைவுகளோடு இறை பக்தியும் அதன் மீது ஒரு பிடிப்பும் உண்டாகும். அதனால் உடன் நிகழும் தொழுகையிலும்   மனம் ஒன்றி விடுவார்கள்
இவ்விதம் செய்தால்  இஸ்லாமிய போதனைகளை  மக்கள் கல்வியை அடைய
ஞானத்தினைப் பெற  ஒரு சிறந்த ஊடகமாக சேவை செய்ய முடியும். 

இஸ்லாம் ஒரு உலகளாவிய மார்க்கம் . இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது ஒரு மொழி பேசும் மக்களுக்கோ உரிமை
யுடையதல்ல.  குர்ஆனும் நபியும் மக்கள் அனைவருக்குமே அனுப்பப் பட்டவர்கள்
   அமெரிக்கா மற்றும் வேறு சில மேற்கு நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் மசூதிகள் கணிசமான எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமை குத்பா உரை  ஆங்கிலம் அல்லது பிற உள்ளூர் மொழிகளில் வழங்கப்படுபடுகின்றது திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது, ‘மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் – பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’ – என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது. ‘உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.’நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்’ (44:13).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.


No comments: