Thursday, September 27, 2012

மூடர்கள் மௌனத்தை சோதித்தார்கள்!

  பேச வேண்டியதை பேச வேண்டிய    இடத்தில்  அவசியம்  பேச வேண்டும் . பேசாமல் இருப்பதும் தவறு. கோபமடைந்து பேசுவதும், செயல்படுவதும் மற்றும் அமைதிக்கு பாதிப்பு வகையில் பேசுவதும் தவறு. ஒரு தவறு மற்றொரு தவறு செய்வதற்கு  தூண்டுதலாக அமைந்து விடக் கூடாது.
அமைதியாக இருப்பது என்பது ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதல்ல . செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதே அமைதியாகிவிடும்.  மௌல்விகள்  பாதிரிகள் மற்றும் ஞானிகள் சில  நேரங்களில் அமைதி காப்பதும், கோபமடைவதும் அனைவரையும் அழித்துவிடும்!
 சிலர் கோபமடையலாம் அல்லது வருத்தமடையலாம். நான் எழுதியதில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவதும் அவர்களது கடமை . அதை விடுதது நாங்களே  முற்றிலும்  அறித்தவர்கள் என்பது போன்ற முடிவுக்கு  வருவதும்,
 அமைதி காப்பதும் சிறப்பாகாது. படம் பண்ணி மற்றவர்களை அவமானப் படுத்தும்போதும் கோபமடையாமல் முறையான பதில் கொடுக்கலாம். அமைதி காக்க அது பலவித கேடுகளையும் கொண்டு வர வாய்பும் உண்டாகலாம்


 அலெக்சாண்டரின் படைகள் காலிஸ்  தலைமையில் 390 கி.மு.வில்  அல்லியாவில் ரோமர்களை தோல்வியடையச் செய்து ரோம் நகரத்தில் நுழைந்து  விட்டனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிசியக்க வைத்தது .ரோம் நகரமே மக்களற்ற இடமாக காட்சி தந்தது.  ஆட்சி செயும் அறிர்கள் நிறைந்த  மேலவையில் ரோம நாட்டு வீழ்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல்  சில பாதிரியார்கள் (முந்தைய ரோமனது பிரதிநிதி   சபையினர்(the old Roman senators))  தாடியுடன்  சிலைபோல் மௌனமாகி இருந்தனர் . அந்த படை வீரர்கள் அவர்களை  சிலையா? அல்லது உயிரோடு உள்ள மனிதர்களா! என அறிந்துக் கொள்ள அவர்களது தாடியை பிடித்து இழுத்தனர். நிலைகுலைந்திருந்த  அந்த பாதிரிகள் (முந்தைய ரோமனது பிரதிநிதி   சபையினர்(the old Roman senators)) கோபமடைந்து   அந்த குற்றவாளி வீரர்களை தாக்கினர்.  இச் செயல் அந்த வீரர்களை ரோமானியர்களை படுகொலை செய்ய தூண்டியது .

இந்த அநீதச் செயல் அலெக்சாண்டரின்(356 -323B.C ) மனதை மிகவும் பாதித்ததாக கிரேக்க தத்துவமேதை டையோஜென்ஸ்டன் (Diogenes)அலெக்சாண்டர் நடத்திய உரையாடலிருந்து (412 -323B.C ) தெரிய வருகின்றது.
அலெக்சாண்டர் வருத்தமுடன் இதைப்பற்றி  டையோஜென்ஸ்டன் (Diogenes) (412 -323B.C )  வினவியபோது அவர் 'நீ என் நிழலிருந்து விலகிச் செல் ' என்று கடுமையாகச் சொன்னாராம்

No comments: