Tuesday, September 11, 2012

வெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை நிகழ்த்திய காலம் இருந்தது. ஒருநாள் தொழுகை முடிந்தபின் குத்பா உரை நிகழ்த்திய போது ஓங்கிய ஒலியில் திஹ்துல் கலபி சஹாபி ஓர் அழைப்பு விடுத்தார்கள். 'ஸாம் நாட்டிலிருந்து பல பொருள்கள் விற்பனைக்கு கொண்டு  வந்துள்ளேன் தேவையானவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம்' என்பதாக. அந்த சப்தத்தை கேட்டபின் குத்பா உரை கேட்காமல் பலர் பொருள்களை வாங்க நாடி சென்று விட்டார்கள். பிலால் ரலி)  மற்றும் சுமார் பதினைந்து பேர்கள் மட்டும் குத்பா உரை கேட்பதில் ஆர்வமுடன் தங்கி விட்டார்கள். இது திஹ்துல் கலபி அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் நிகழ்ந்தது .(திஹ்துல்  கலபி மிகவும் அழகானவர்கள்.அவர்கள். இஸ்லாத்தில் தன்னை இனைத்துக் கொண்டார்கள் . நபி (ஸ.ல்) அவர்களுக்கு பெரும்பாலும்   வான் தூதர் ஹழ்ரத் ஜிப்ராயில்(அலை)   திஹியதுள் கலபி  சஹாபி உருவத்தில் தான் வஹியைக்  கொண்டு  வருவார்கள்  )
அப்பொழுதுதான் இறைவனிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஒரு வசனம்  இறக்கியது.

ஸூரத்துல் முனாஃபிஃகூன்
63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (குர்ஆன்  63:9.)

அதன் பிறகுதான் வெள்ளிக் கிழமை குத்பா உரைக்குக் பின் தொழுகையை நாயகம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் இரண்டு பெருநாளுக்கு மட்டும்(ஹஜ் மற்றும் நோன்புப் பெருநாள்)  தொழுகைக்குப் பின்  குத்பா உரை நிகழ்த்தப் படுகின்றது.

4895. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நான்அவர்களுடனும். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி(ஸல்) அவர்கள் (மிம்பர் - மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தம் கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது.




மலர்கள் பூத்த பின் இதழ்கள் உதிர்வது உறுதி
நாம் பிறந்த பின் இறப்பதும் உறுதி
சுவனம் அல்லது நரகம் இரண்டில் ஒன்று உறுதி
இரண்டில் ஒன்று நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது நாம் வாழும் முறையில்
இயற்கை அல்லது இறைவன் இதில் எது உறுதி?
இதில் இரண்டிலும் இறப்பது நம் கையில் இல்லை என்பது உறுதி,

வேதம் பேசாது . பேசாத வேதத்தில் மீது உன் கவனம் வருகின்றது.
உன் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பியது யார்?
ஆசிரியரா  அல்லது உன் பெற்றோரா?
அவர்களை உருவாக்கியது யார்?
தொடர் உன் சிந்தனையை..உன்னுள் ஒரு ஒளியும் ஒரு விளக்கமும் கிடைக்கும் .
பசி வந்தால் ,உணவு கிடைத்தால் உண்டு விடுகின்றாய் .அது எங்கிருந்து வந்தது என்பதனை நீ அறிய வேண்டாமா !
உனக்கு கிடைத்த அறிவின் ஆற்றலை முடக்காதே. பணம் ,பணம்...இத்தோடு முடிந்தால் வாழ்வே உயிர் வாழும் பிணம்தான் 

No comments: