Friday, September 14, 2012

வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா?

இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார்  மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .



  பொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம்  ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி ன்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .


இந்த கொள்கையத்தான் 'தவ்ஹீத்' என்பார்கள்.  தவ்ஹீத் என்றால் ஏகத்துவம் என்று பொருள்படும்.
முஸ்லிம் என்றால் ஏகத்துவம்(தவ்ஹீத்) அவன் இதயத்தோடு இனைந்து அதன்படி அவன் வாழ வேண்டும் .

 சிலர் 'தவ்ஹீத் ஜமாஅத்' என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். மற்றும் சிலர் 'தவ்ஹீத் ஜமாஅத்' என்றால் தவறாக பார்க்கின்றார்கள்.ஏன் இந்த முரண்பாடான கருத்து வேறுபாடுகள். இஸ்லாத்தின் அடித்தளமாக இருப்பதே ஏகத்துவம் என்பதனை அறியவில்லையா? அல்லது அறிந்தும் அறியாமல் வேறுபடுத்தி பிளவு படுத்த விருப்பமா?
அன்புக்கும் , சகோதரத்துவதுக்கும் தடையாக வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது வேற்றுமையாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை முரண்பாடாக , பிளவாக மாறிவிடாமல் இருப்பது நன்மை தரும் 

அபூ மூஸா அல் அஷ்அாி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர்  அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் ‘மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) ‘அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?” என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்…
‘அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று (பிரார்த்தனை செய்ய) சொன்னார்கள். நூல்: அஹ்மத்

மற்றொரு அறிவிப்பில், அண்ணல் நபி பின்வருமாறு கூறியதாக அபூபக்கா; (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘உங்களிடையே உள்ள இணைவைப்பு எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைமுகமானதாக உள்ளது. பெரும் இணைவைப்பு மற்றும் சிறிய இணைவைப்பு ஆகிய இரண்டையும் உங்களிடமிருந்து அகற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். யா அல்லாஹ்! அறிந்துகொண்ட நிலையில் உன்னையன்றி மற்றவர்களை வணங்குவதை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறிந்திடாமல் (செய்பவை) குறித்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று (பிரார்த்தனை புரியுமாறு) கூறினார்கள். ஆதாரம்: ஷஹீஹ் அல் ஜாமீ

மனித அறிவு அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருக்கவில்லை.அறிவுக்கு ஏற்றதுபோல் சிந்தனைகளும்,விளக்கங்களும்  முரண்பாடுகளும் எழத்தான் செய்யும் , இரண்டு அறிவுஜீவிகள் ஒத்துப் போவதில்லை, ஆனாலும் முயற்சி ஒருமையை உருவாக்கி தீர அன்போடு ஆதாரங்களை டுத்து வைத்து உண்மையை அறிய முயலலாம் . அடுத்த மார்க்க நண்பர்களோடு வாதம்
செய் யும் பொழுது பணிவு இருக்கின்றது அதனையே நமக்குள் செய்யும் பொழுது அந்த ஒற்றுமையும் கடமை உணர்வும் காணாமல் போய் விடுகின்றது . இதற்கு முக்கிய காரணம்  'தான் சொல்வதுதான் சரி' என்ற பிடிவாதம். கற்றோருக்குள் அந்த கடிவாளம் இல்லையென்றால் மற்றவர் (அறியாதோர் மற்றும் விளங்காதோர் )யார் சொல்வதை டுத்துக் கொள்வார்கள் .கருத்து  வேற்றுமை  மற்றும் விளக்கங்கள்  பிளவுக்கு வழி  வகுக்கின்றது,  இதனை  அறிந்து  செய்கின்றனரா  அல்லது  அறியாமல்    செய்கின்றனரா! .மக்கள் குழப்பம் அடைந்து பல பிரிவுகளாக போய் விடுவது மட்டுமல்லாமல்  விரோத மனப்பான்மையையும் கடைப் பிடிகின்றார்கள் . எனவே   முரண்பாடுகள் தோன்றுவதை அங்கீகரிப்போர் சான்றுகளுடன் நின்று அணுகும் போக்கினைக் கடைப்பிடிக்காது தமது பகுத்தறிவுக்கும், கருத்துக்களுக்கும்,மதிப்பு கொடுக்காமல்  ஊர் மரியாதைக்கும், ஊர்ஜிமற்ற இரண்டாம் கருத்துகளுக்கும், முன்னுரிமை வழங்குகின்ற போது தீர்வுக்குப் பதிலாக முரண்பாடு தொடர்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தனிப்பட்ட பயணத்தின் போதும், போர்க்களம் சென்றபோதும் ஸஹாபாக்கள் மத்தயில் கருத்து வேறூபடுகள் தோன்றின.
நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி அறுவுறுத்தும் வசனத்தை உமர் (ரழி) அவர்கள் சரியாககப் புரியாயததன் காரணமாகவே அல்லாஹ்வின் தூதரின் மரணத்தை மறுத்தார்கள், ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணத்தை உறுதி செய்தது மாத்திரமின்றி அதற்கான சான்றையும் அல்குர்ஆனில் இருந்து ஓதிக்காண்பித்தார்கள், இதன் பின்பு உமர் (ரழி) அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்.
அடிப்படையான இஸ்லாமிய கொள்கையில்  கருத்து முரண்பாடு இல்லாமல் இருக்கும்போது மற்ற செயல் முறைகளில் சில கருத்து வேறுபாடுகள் ,அது  ஏகத்துவம் கொள்கையில் யாரும் தடம் புரளவில்லை ,அவ்விதம் அவர் நடந்தால் அவர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர் .முற்றும் அறிந்த இறைவன் அதனை கண்காணிப்பான்.
முற்றும் அறிந்தவன் இறைவன் .

No comments: