Sunday, September 9, 2012

எழில் தரும் எகிப்து

எகிப்தின் நைல் நதி எகிப்தின்  பண்டைய நாகரீகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்து விட்டது .கிளியோபாத்திரா எகிப்தின்  புகழ் வாய்ந்த ராணியாக இருந்த சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது .     கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த பெருமையைப்  பெற்றவர் கமால் அப்துல் நாசர் அவர்கள்

அரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.


-----------------------
பண்டைய எகிப்து  
மூஸா நபியவர்களின் வரலாற்றைக் கூறும் திருமறை எகிப்தின் ஆட்சி பற்றியும் அதன் நடைமுறைகளையும் பேசுகிறது.திருக் குரானின் வசனங்கள் மூலம் எகிப்தின் ஆட்சியில் இரு முக்கியமான கூறுகள் காணப்பட்டதாக நமக்கு தெரிய வருகிறது.

    பாரோக்கள்
    பரோக்களின் ஆலோசனை சபை

பரோக்களின் ஆலோசனை சபை எகிப்திய பாரோக்களின் ஆட்சியில் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பாரோக்கள் ஒரு விடயத்தை செய்ய முன் அவர்களின் ஆலோசனை சபையின் ஆலோசனைகளை செவிமடுத்தே செயற்பட்டு வந்துள்ளனர்.


திருக் குரானின் 7 வது அத்தியாயம் இப்படிக் கூறுகிறது
  
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்."

“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்)."

அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.

ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.

(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)

அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!

“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.

அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”

 ( 7 அத்தியாயம் 104 முதல் 114 வரை )
http://tamilkhilafa.blogspot.in/2012/04/kabbalah.html

No comments: