நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோபம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.
எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்கள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திருத்துவது ஒருவகை .
அதேவேளையில் அறியாமையில் இருப்பவர்களை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.
இங்கும் காவல்துறையினர் தங்களது சில்மிஷ வேலைகளை காட்டியுள்ளனர். இங்கு நிற்கக்கூடாது ,புகைப்படங்கள் எடுக்ககூடாது.என அறவழி போராட்டக்காரர்களுக்கு கொடுக்கும் இடையூறுகளை இங்கும் செய்துள்ளனர்.
நாங்கள் எந்த சட்டத்தையும் மீறவில்லை நாங்கள் இங்கு அமைதியான முறையில் நின்று நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நூலை இலவசமாக வழங்கி வருகிறோம் . ஆம் அவர்கள் தங்கள் பணியை அமைதியாக செய்து வருகின்றனர்
அபுஸாலிஹ்
2 comments:
மெய் சிலிர்க்க வைக்கும்
அற்புதமான முயற்சி
அன்பு சகோதரர்களின்
நல்ல முயற்சிக்கு அல்லாஹ்
இமையிலும் மறுமையிலும்
நற்பலனை கொடுப்பானாக ஆமீன் !
மெய் சிலிர்க்க வைக்கும்
அற்புதமான முயற்சி
அன்பு சகோதரர்களின்
நல்ல முயற்சிக்கு அல்லாஹ்
இமையிலும் மறுமையிலும்
நற்பலனை கொடுப்பானாக ஆமீன் !
Post a Comment