Tuesday, February 28, 2012

மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!


 மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!

அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி  முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .


 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு  குடும்ப  அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக்  குடிமகனாக(Citizen Of  The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி .     உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன்
 நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  அதில்  அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.     ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல.  ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம்  இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள்  ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
     
  உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர்  பேராசிரியர் அன்பழகன்  மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.
  நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் .  முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன்  வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி  பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர்  மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில்   வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு  தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில  தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால்  நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும்  பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை  ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்

"முஃமின்களே!  ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

 Friends are like flowers நண்பர்கள் - நட்பு குறள் 

788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

2 comments:

VANJOOR said...

நீதிபதி மார்கண்டேய கட்ஜு.: நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.

சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.


அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா.


உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம்.


அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள்.

எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள். :நீதிபதி மார்கண்டேய கட்ஜு

ப.கந்தசாமி said...

சிந்திக்கவேண்டிய கருத்துகள்.