Saturday, February 4, 2012

"குடி“மக்கள் சிந்தனைக்கு..

by முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.

  • உலக நாடுகளோடு இந்தியா எதில் போட்டி போடுகிறதோ இல்லையோ, மது விற்பனையில் போட்டி போட்டு முன்னேறிவருகிறது.
  • குடிப்பவர்கள் தம் உயிரோடு தம்குடும்பத்தின் உயிரையும் வாங்குகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தனக்குத் தொடர்பே இல்லாதவர்களின் உயிர்களையும் பறித்துவருகிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
  • 2010 – 11-ஆம் ஆண்டுகளில் அரசுமதுபானக்கடைகள் வழியாக  தமிழக அரசுக்கு    கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
  • இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் பள்ளிமாணவர்கள் இன்றைய சூழலில் அதிகமாக மதுவுக்கு அடிமையாகிவருகிறார்கள் என்பதுதான்.
  • சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேல்தான் மது வாங்கமுடியும் என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன.
சிந்தனைக்காக சில..
மது உள்ளே போனால்
உன் மதி வெளியே போகும்

கள்ளுக் குடிச்சவனுக்கு
சொல்லுப் புத்தி ஏறாது
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
குடி குடியைக் கெடுக்கும்
குட்டக்கலப்பை காட்டைக் கெடுக்கும்

சாராயம் உள்ளே போனால்
பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்


சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் குடித்துவிட்டுக் குழந்தை மொழிபேசுவோரை..

“உண்டு மகிழ்ந்தட்ட மழலை நாவின்
பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்ற
(மதுரைக்காஞ்சி -668-669)
என்று உரைப்பார் மாங்குடி மருதனார்.
  மேலும் படிக்க இங்கு  கிளிக் செய்யுங்கள் "குடி“மக்கள் சிந்தனைக்கு..
Source :http://gunathamizh.blogspot.in/

நாம் விரும்பி இந்த உலகத்தில் பிறக்கவில்லை
நாம் விரும்பினாலும் உடனே இந்த உலகத்தைவிட்டு சென்றுவிடமுடியாது.

தற்கொலை செய்ய நினைத்து பிழைத்தவர்களையும்
வாழ நினைத்து செத்தவர்களையும் நாள்தோறும் காண்கிறோம்..

இயற்கையாக வந்த உயிர் இயற்கையாகவே செல்லவேண்டும்
அதுதான் நாம் நம் உயிருக்குத் தரும் மதிப்பு
----- முனைவர். இரா.குணசீலன்

No comments: