Wednesday, February 1, 2012

பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி?







நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.


கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக(!!!!!!!!) பெறலாம். ஒருவருடத்திர்கான கட்டணம் பத்து டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஐநூறு ரூபாய். அப்படி வாங்குவதற்கு VISA, Mastercard வசதியுடைய கிரெடிட்/டெபிட் கார்டு தேவை. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு Google Wallet (முன்னர் இதன் பெயர் Google Checkout) என்ற சேவையை பயன்படுத்துகிறது. இது Paypal போன்று இணையத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியாகும்.


மேலும் டொமைன் வாங்கிய பின் அதனை நிர்வகிக்க Google Apps என்னும் வசதியை நமக்கு தருகிறது. இங்கு (admin@bloggernanban.com போன்று) நம் தளத்துடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்கவும், Sub-Domain-களை உருவாக்கவும் செய்யலாம்.




டொமைன் வாங்கும் முறை:


1. Blogger Dashboard => Settings => Basic பகுதிக்கு செல்லுங்கள்.




2. அங்கு Publishing என்பதற்கு கீழே உங்கள் ப்ளாக் முகவரி இருக்கும். அதற்கு கீழே உள்ள Add a Custom Domain என்பதை க்ளிக் செய்யுங்கள்.




3. உங்கள் ப்ளாக் பெயருடன் .com என்று வரும். அதற்கு பதிலாக .net, .org, .info, .biz ஆகிய டொமைன்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் .com என்ற முகவரியே சிறந்தது. பிறகு Check Availability என்பதனை க்ளிக் செய்யுங்கள்.


4. அதை க்ளிக் செய்தவுடன் நீங்கள் தேர்வு செய்துள்ள முகவரியை இதுவரை யாரும் வாங்கியிருக்கவில்லை என்றால் Available என்று காட்டும். இல்லையென்றால் நீங்கள் வேறு முகவரி கொடுக்க வேண்டும்.




அந்த பக்கத்தில் Continue to registration என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


5. பிறகு வரும் படிவத்தில் உங்கள் விவரங்களை கவனமாக பதிவு செய்யுங்கள்.




இந்த படிவத்தில் முதலில் இருக்கும் Privacy options என்ற இடத்தில் இருக்கும் பெட்டியில் டிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் தள முகவரி பற்றிய தகவல்களை இணையத்தில் தேடும்போது உங்கள் பெயர் மற்றும் முகவரியை மறைப்பதற்கு உதவும். மற்ற தளங்களில் டொமைன்கள் வாங்கினால் இவ்வாறு மறைப்பதற்கு தனியாக பணம் கட்ட வேண்டும்.




Fax என்பதற்கு கீழே இரண்டு தேர்வுகள் இருக்கும்.


I have read xxxxx terms of service - இதனை அவசியம் டிக் செய்தாக வேண்டும். 
Automatically renew my registrartion every year - இதனை டிக் செய்யாமல் இருப்பது நலம். இதை டிக் செய்தால் ஒவ்வொரு வருடம் முடிந்த பின்பும் நீங்கள் எந்த கார்டிலிருந்து டொமைன் வாங்கியுள்ளீர்களோ அந்த கார்டிலிருந்து தானாகவே பணம் எடுத்து உங்கள் டொமைனை புதுப்பித்துக் கொண்டிருக்கும்.


படிவத்தை பூர்த்தி செய்தபின் I accept proceed to Google Checkout என்பதை க்ளிக் செய்யுங்கள்.


6. பிறகு வரும் பக்கத்தில் தான் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்ட் விபரங்களைக் கொடுக்க வேண்டும்.




இதில் Card Number, Expiry Date, CVC, Name ஆகியவற்றை கார்டில் உள்ளபடியே பூர்த்தி செய்யுங்கள்.


CVC என்பது உங்கள் கார்டின் பின்புறம் கார்ட் எண்ணிற்கு அடுத்ததாக மூன்று இலக்கத்தில் இருக்கும்.


கார்ட் விபரங்களைக் கொடுக்கும் போது கவனம் தேவை. Address Bar-ல் https:// என்று இருந்தால் மட்டும் கொடுங்கள். வெறும் http:// என்று இருந்தால் கொடுக்க வேண்டாம். அது பாதுகாப்பானது அல்ல.


படிவத்தை பூர்த்தி செய்தபின் Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.


7. பிறகு வரும் பக்கத்தில் i accept terms of service என்பதற்கு அருகில் உள்ள பெட்டியில் டிக் செய்து Place your order now என்பதை க்ளிக் செய்யுங்கள்.




அவ்வளவுதான்! சிறிது நேரம் கழித்து உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு டொமைன் உங்களுக்கு வந்துவிடும். இது குறித்து உங்களுக்கு மெயில் அனுப்பப்படும்.


பிறகு Dashboard-ல்  Settings => Basic பகுதிக்கு வந்தால் பின்வருமாறு காட்டும்.




பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கு Redirect ஆக ஓரிரு நாட்கள் ஆகலாம். ஆனாலும் நீங்கள் வாங்கிய கஸ்டம் டொமைன் முகவரி சில மணி நேரங்களில் செயல்படத் தொடங்கிவிடும்.


புதிய டொமைனுக்கு மாறினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, நீங்கள் பதிவிட்டு சில மணி நேரம் கழித்தே நமது ப்ளாக்கை  பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியும்.அதனை சரி செய்வதற்கு உங்கள் ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடர வேண்டும். 


அது பற்றிய அறிவிப்பை உங்கள் பிளாக்கில் கொடுத்துவிடுங்கள். 




இந்த மாற்றம் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்(கள்) அடித்துள்ளது கூகுள்.


1. டொமைன் விற்று காசு பார்க்கலாம்.


2. சர்ச்சைக்குரியவைகளை எளிதாக நீக்கலாம்.



1 comment:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல உபயோகமான தகவல். எனது வலைத் தளைத்தை .com மாற்ற உத்தேசித்திருந்தேன் அதற்கு உங்கள் பதிவு நல்ல வழிகாட்டியாக அமைந்திக்கிறது. நன்றி.