Saturday, February 25, 2012

வதந்தி பேசுவதால் வரும் விளைவுகள்


"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்." 

-திருக்குர்ஆன் 2:42

'நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அதை ஏன்டா மற்றவர்களிடம் சொன்னாய். அது பெரிய செய்தியாகப் போய் ஊரெல்லாம் அதைப் பற்றி பேச அந்த குடுப்பம் சிதையும் அளவுக்கு ஆக்கிவிட்டாயே .பாவம்டா உண்மையிலேயே அவங்க நல்லவங்கடா'.. என்று மிகவும் வருந்துபவர்களைப் பற்றி அறிவோம் . தங்கள் நேரத்தினை ஓட்டுவதற்கு வாய் கூசாமல் பேசிவிட்டு வருத்தமடைவதாகச்  சொல்லிவிட்டு சிலநாட்கள் கழித்து அதே வேலையில் ஈடுபடுவார்கள். இது சில மக்கள்  மத்தியில்  இருந்து வரும் வழக்கம் . ஆனால் இப்பொழுது பத்திரிகைக்காரர்களும் அரசியல்வாதிகளும் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு நாட்டிற்கே அழிவை உண்டாக்குகின்றனர் .(அமேரிக்காவுக்கு இது ஒரு கை வந்த கலை என்பது உலகமே அறியும்) இதில்  பெருமையாக 'கிசு கிசு' என்று  தலைப்பே போட்டும் சிலர் எழுதுகின்றனர்.அதனால்  விளையும் விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இதனால் மதக் கலவரம் ஜாதிச் சண்டைகள் வந்து விடுகிறன. சில நாடுகள் மற்ற நாடுகளில் இதனைக் கிளப்பி விட்டு சண்டையை உண்டாக்கி தாங்கள் குளிர் காய்கின்றனர்.
"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

"முஸ்லிம்களில் எவர் சிறந்தவர்" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, "எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
ஆதாரம் : புகாரி
    
 "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். 

அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி

வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.இது பலமுறை பரப்பப்பட்டதுண்டு. .. இது எதிர்காலத்திலே மிக மோசமான விளைவுகளை  ஏற்படுத்தக் கூடும்.
ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும்,பேசுவதும்  , எழுதுவதும் ஆகும். ...வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.
 உலகம் மற்ற மக்கள் தனியார் வாழ்க்கை பற்றி எழுதியும்  பேசியும்   மற்றும் கொடூரமாக அல்லது பொய் கருத்துக்கள் வழியே அவதூறு உண்டாக்குவதாக அது இருக்கலாம் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் அவைகள் பேசப் பட்டால் அது எவ்விதமிருக்கும்  என்பதனை அவர்கள் சிந்திப்பதே கிடையாது. மக்கள் சமூகத்தின் மீது அதன் மோசமான விளைவை உண்டாக்கும் அது நம்மையும் நம் பரம்பரையும் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர முற்படுவதில்லை.
மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களை அவர்கள் அதனை ஒரு நன்மை வழியில் பயன்படுத்தினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். வதந்தியை பரப்பாமலும்,அதனை நம்பாமலும் இருப்பது சிறப்பு.

அநியாயக்காரர்கள் யார்?

"முஃமின்களே!  ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."


-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. 

-திருக்குர்ஆன் 13:11

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
ஆதாரம் : புகாரி

No comments: