Monday, February 13, 2012

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நாகப்பட்டிணத்தில் உள்ள மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் 4 தாலுக்காக்கள் இருக்கிறது.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் அதிகளவில் மயிலாடுதுறையில் வசிக்கின்றனர். எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரை கொண்ட சென்னை உயர்நீதி மன்ற அமர்வு, "மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கக் கோரும் கோரிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் சட்ட விதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
Source : http://www.inneram.com/news/

No comments: