Monday, February 20, 2012

தம்பதிகளுக்குள் ஏற்படும் இனிய செக்ஸ் ...!

  மேற்கத்திய கலாச்சாரம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேச மற்றும் விஷயங்கள் பற்றி விவாதிக்க ஊக்குவிக்கிறது.
ஆனால் நம் கலாச்சாரங்களில் ஆண்கள் சொல்வதைக் கேட்டு   மனைவி  வாயை மூடிக்கொண்டு கேட்க  வேண்டும் இதனால்  பெரும்பாலும் அவர்களது மனைவிகள் மனதில் எழும் விஷயங்களை பற்றி பேச (எப்போதும்) தயக்கம் காட்டுகின்றனர்.
மனைவி மீது  அன்பு காட்டுவதில் மேலோங்கி இருப்பினும் கலந்துரையாடுவதில் மகிழ்வுள்ளது என்பதனை அறிய வேண்டும்.
மனதில் உள்ளதனை அறிய சில நேரங்களில் மற்றும் சில நேரங்களில் குறிப்பினால் அறிய முடியும் .அது தம்பதிகளுக்குள் ஏற்படும் இனிய செக்ஸ் .அதனையும் கணவன் வெளிப்படையாக தெரிவித்தாலும் மனைவியிடமிருந்து நடவடிக்கையின்   குறிப்பினால் மட்டும் அறிந்துக் கொள்ள முடியும் . ஆனால் அது மகிழ்வின் உயர்வினையடைய  உரையாடுவதின் மாண்பே இதற்கு தொடர்ச்சியாக இருக்கின்றது. இதற்கென்று சில செயல்பாடு மட்டுமின்றி காதல் நயம்பட அன்பு மிகும்  பேசும் பேச்சும் உள்ளதனை சிலர் அறியாமல் உள்ளனர். .மனைவியுடன் இச்சையை தணிக்க பிச்சை கேட்பதில் தவறல்ல ஆனால்  வெறும் இச்சையை அடக்க வழி உண்டாக்கும்  இயந்திரமல்ல மனைவி . மனைவி நம் இன்ப துன்பங்களுக்கு பங்கு வகிப்பவள். அதனால் நாம் மகிழ்வு அடைய முயலும் போது அவளையும் மகிழ்விக்கும் அளவிலேயே அனைத்துமிருக்க முயல வேண்டும் .
காதலுக்க்ம் காமத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அருமையாக பலர் பலவிதமாக சொல்லியுள்ளனர் .

 " காதலை கண்டோர் அரிது. காதல் என்பது சாதல் தண்மை...காதலுக்குள்ளே காமம் இருப்பினும் காமம் என்பதில் காதலே இல்லை. காமம் என்பதில் காதலே இல்லை. காமம் என்பது தேகம் கலத்தல். அறிவு, உணர்ச்சி, ஆன்மாவினோடு கலந்து போவதே காதல். காதலின் குணத்தை சொல்வது கடினம். அனுபவம்  ஒன்றே அறியக்கூடும்.உடலைப் பற்றிய உணர்ச்சியே அல்ல. அழகை மட்டும் ஆசிப்பதும் அல்ல. நிறத்தைக் கண்டு நிற்பதும் அல்ல. அறிவை மெச்சி அடைவதும் அல்ல. இளமையை எண்ணி  இருப்பதும் இல்லை. புகழோ,இகழோ பொருட் படுத்தாது . இன்பமோ துன்பமோ இணைபிரியாது. அழுகின உடலையும் அணைத்து நிற்கும். உலக சுகங்களை உதறித் தள்ளும். செல்வமோ, வறுமையோ சேர்ந்தே வாழும். குற்றம் நேர்ந்திடினும் குறை சொல்லாது. ஒட்டியிருந்து உயிரையும் உதவும். பற்றியது ஒன்றில் பற்று விடாது. தன்னை வெறுக்கினும் தான் வெறுக்காது. விரும்பிய பின்னர் விலக என்னாது. ஊனையும்,உணர்வையும், உயிரையும்  தாண்டி அப்பால் தொடரும். அன்பே காதல், காதல் முறிந்தால் சாதல் கருதும்".        
- நாமக்கல் கவிஞர்

"காதல் எனப்படுவது யாதெனில்

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ இல்லாமல்
சுவாரசியமாய்ப் பின்னப்படும்
ஓர் உறுதியான உணர்வுவலை"

- அன்புடன் புகாரி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் மோகத்தை மாற்ற தேடு காதலை !

No comments: